ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்! 

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்! 

ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானில் தினசரி 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால், வேகம் 64 கி.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

ஹைலைட்ஸ்
  • ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்துள்ளது
  • 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால், ​​வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்
  • இந்த ப்ளானின் வேலிடிட்டி 64 நாட்கள் ஆகும்

Jio, ரூ.999-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 64 நாட்கள் ஆகும். கூடுதலாக, ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானில், அனைத்து ஜியோ எண்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் செய்யலாம்.

ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானில் தினசரி 3 ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டால், வேகம் 64 கி.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த ப்ளானை MyJio app மற்றும் Google Pay அல்லது Paytm போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். கூடுதலாக, ரூ.349 ப்ளானில் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். அந்த ப்ளானில் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

கொரோனா வைரஸ் ஊரடங்கால், எல்லோரும் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஜியோ ரூ.2,399-க்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளானை கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும். மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானுடன் "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஆட்-ஆன் பேக்கைக் கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளான்களில், கூடுதலாக 50 ஜிபி டேட்டாவை ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 என்ற விலையில் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளானில் பயன்படுத்தலாம். இது, அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நிறுவனம் பிப்ரவரியில் ரூ.2,121 ப்ளானைக் கொண்டு வந்தது. அந்த ப்ளானில் ஜியோ ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை 336 நாட்களுக்கு வழங்கியது.


Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்!
  2. 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்!
  3. சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!
  4. 4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!
  5. விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!
  6. பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!
  7. சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்!
  8. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்!
  9. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்!
  10. பிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com