Jio has brought the 2020 Happy New Year Offer just weeks after revising its prepaid tariffs
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ப்ரீபெய்ட் இணைப்பைப் பயன்படுத்தி ஒரு “2020 புத்தாண்டு சலுகை” மற்றும் புதிய ஜியோ போனை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு “2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகை” ஆகியவற்றை அறிவித்துள்ளது. ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான புதிய சலுகையின் கீழ், தொகுக்கப்பட்ட டேட்டா மற்றும் SMS செய்திகளின் சலுகைகளுடன், அன்லிமிடெட் குரல் அழைப்பை 365 நாட்களுக்கு ரூ. 2,020-க்கு தொலைதொடர்பு ஆபரேட்டர் வழங்குகிறார். ஜியோ 2020 புத்தாண்டு சலுகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்லுபடியாகும். சமீபத்தில், ஜியோ புதிய All-in-One ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்து அதன் கட்டணங்களை திருத்தியது. மும்பையைச் சேர்ந்த ஆபரேட்டரும் இந்த மாத தொடக்கத்தில், 28 நாட்களுக்கு 300 SMS செய்தி பலன்களுடன் ரூ. 98 ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தினார்.
இன்று முதல் கிடைக்கிறது, 2020 புத்தாண்டு சலுகை, அன்லிமிடெட் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டாவை 365 நாட்களுக்கு, ரூ. 2,020-க்கு வழங்குகிறது. புதிய சலுகையின் கீழ் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு SMS செய்திகளைப் பெறுவதற்கும் JioTV, JioCinema மற்றும் JioNews போன்ற ஜியோ செயலிகளுக்கான (Jio apps) அணுகலுக்கும் உரிமை உண்டு.
ஜியோ தனது பொது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விளம்பர சலுகைகளுக்கு கூடுதலாக, ஜியோ போன் வாங்க விரும்பும் புதிய ஜியோ சந்தாதாரர்களுக்கு 2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகையை ஜியோ கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையில், அன்லிமிடெட் குரல் அழைப்பு சலுகைகளுடன் ரூ. 1,500 மதிப்புள்ள ஜியோ போன் மற்றும் 365 நாட்களுக்கு 0.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டா ஒதுக்கீடு ஆகியவை அடங்கும். 2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகையைத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு SMS செய்திகளும் ஜியோ செயலிக்கான (Jio apps) அணுகலும் கிடைக்கும்.
2020 புத்தாண்டு சலுகை மற்றும் 2020 ஜியோ போன் புத்தாண்டு சலுகை இன்று முதல் கிடைக்கிறது. இந்த சலுகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் குரல் அழைப்பு பலன்கள், ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஜியோ அல்லாத எண்களுக்கு அழைக்கப்படும் அழைப்புகளுக்கு நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (fair usage policy - FUP) பொருந்தும்.
அக்டோபரில், ஜியோ மற்ற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு குரல் அழைப்புகளை சந்தாதாரர்களுக்கு நிமிடத்திற்கு ஆறு பைசா வசூலிக்கத் தொடங்கியதாக அறிவித்தது. டெல்கோ தனது Interconnect Usage Charge (IUC) கூடுதல் தரவு உரிமையுடன் ஜியோ அல்லாத குரல் அழைப்பு நிமிடங்களை வழங்க ரூ. 10 மற்றும் ரூ. 100 டாப்-அப் வவுச்சர்களை அறிமுகப்படுத்தியது.
Jio New Plan Prices Now Live: Latest All-in-One Plans Start at Rs. 199 With 28 Days Validity
Jio Rs. 98 Prepaid Plan Revised to Offer 300 SMS Messages for 28 Days
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்