திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், டெல்லியின் சில பகுதிகளில் குரல், SMS மற்றும் டேட்டா இணைப்பை பாரதி ஏர்டெல் நிறுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை முதல் பல பயனர்கள் சமூக ஊடகங்களில் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் புகார் அளித்த பயனர்களுக்கு பதிலளிக்கும் போது, அரசாங்க உத்தரவின் விளைவாக தலைநகரின் சில பகுதிகளில் அதன் சேவைகளை நிறுத்தியுள்ளதை, ஏர்டெல்லின் ஆதரவுக் கணக்கு உறுதிப்படுத்தியது. சில வோடபோன் ஐடியா பயனர்கள் டெல்லி NCR-ன் சில பகுதிகளில் இணையத்தை நிறுத்தியதாகவும், தொலைதொடர்பு ஆபரேட்டரும் இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏர்டெல் இதுவரை இடைநீக்கத்தை விதித்த பகுதிகளின் பட்டியலை வெளியிடவில்லை என்றாலும், ட்விட்டரில் பயனர்கள் சீலாம்பூர், ஐ.டி.ஓ மற்றும் இந்தியா கேட் போன்ற வட்டாரங்களில் இந்த சேவைகளை அணுக முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
Hi! We're complying with instructions received from govt. authorities on suspending Voice, SMS and data in certain areas in Delhi. Once the suspension orders are lifted, our services will be fully up and running. We're sorry about the inconvenience. Thank you, Manisha https://t.co/2G23qpsqlP
— Bharti Airtel India (@Airtel_Presence) December 19, 2019
ஏர்டெல் பயனர்களுக்கு கூடுதலாக, தலைநகரில், சில வோடபோன் ஐடியா பயனர்களும் அதன் நெட்வொர்க்கில் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர். தொடர்ச்சியான வோடபோன் ஐடியா ட்வீட்களும் பணிநிறுத்தத்தை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகள் விரிவாக இல்லை.
Hi! We would like to inform you that there is a planned outage scheduled as per government directive. This will rectified as soon we receive the next directive from the authority” We appreciate your patience and cooperation for the same - Priya
— Vodafone (@VodafoneIN) December 19, 2019
Hi! As per the directive received from the Government, Services are stopped at few locations (Jamia, Saheen bagh, Bawana, Seelampur, Jaffrabad, Mandi House and part of Walled city). As a result of this you will not be able to use services till 1pm at these locations - Tina
— Vodafone (@VodafoneIN) December 19, 2019
மீடியாநாமாவின் (MediaNama) அறிக்கையின்படி, டெல்லி NCR பிராந்தியத்தின் சில பகுதிகளில் இணைய பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வோடபோன் ஐடியா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் தெளிவு பெற நாங்கள் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோவை அணுகியுள்ளோம். மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ சேவைகளும் பணிநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக PTI தெரிவித்துள்ளது. இது காவல்துறையினரால் உத்தரவிடப்பட்டது. உத்தரவின் படி, வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் சுவர் நகரப் பகுதிகள், மண்டி ஹவுஸ், சீலாம்பூர், ஜாஃபர்பாத், முஸ்தபாபாத், ஜாமியா நகர், ஷாஹீன் பாக் மற்றும் பவானா உள்ளிட்ட இடங்களுக்கு சேவைகள் நிறுத்தப்பட்டன. "நடைமுறையில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான தகவல்தொடர்புகள், அதாவது குரல், SMS மற்றும் இணையம், Cell IDs/BTS (base transceiver stations)-ல் 19-12-2019, 09:00 மணி முதல் 13:00 மணி நேரம் வரை நிறுத்தப்பட வேண்டும்"என்று புது தில்லி சிறப்புப் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார் என்று PTI மேற்கொள் காட்டுகிறது.
இதற்கிடையில், ஜியோ பயனர்கள் டெல்கோவிலிருந்து தங்களுக்கு கிடைத்த செய்தியை பதிவிடுகின்றனர். "அரசாங்க அறிவுறுத்தலின் படி மேலும் அறிவிப்பு வரும் வரை உங்கள் பகுதியில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள்.
jio stops working too #IndiansAgainstCAA pic.twitter.com/rB9b226l2B
— arrey pls ignore karo mujhe ???????????????????????? (@themdavesaves) December 19, 2019
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்