முன்பு கூறப்பட்டது போலவே 72 மணி நேரத்துக்குள் இந்த ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.
ஐடியாவை தொடர்ந்து வோடாபோனும் ஒரே ரீசார்ஜில் கூடுதல் பலன்கள் எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஐடியாவை தொடர்ந்து வோடாபோனும் ஒரே ரீசார்ஜில் கூடுதல் பலன்கள் எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து ப்ரிபெய்டு பயன்பாட்டாளர்களும் அளவில்லா கால்கள், கேஷ்பேக், கூடுதல் டேட்டா, காலர் ட்யூன் போன்ற சலுகைகளை ஒவ்வொரு ரீசார்ஜுடன் பெறலாம். ஒவ்வொரு ரீசார்ஜுக்கு பிறகும் ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதன் மூலம் இலவச சலுகைகளை பெற முடியும். இதனை ரீசார்ஜ் செய்த 72 மணி நேரத்துக்குள் பெற முடியும். தொகைக்கு ஏற்றவாறு இலவசங்கள் இருக்கும் என்றும், அதிகம் ரீசார்ஜ் செய்தால் அதிகம் சலுகை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகையை பெற ஐடியா பயன்பாட்டாளர்கள் *999# என்ற எண்ணை டயல் செய்தும், ஐடியா ஆப் மூலமாகவும் பெறலாம். ஒருமுறை அவர் இந்த சலுகையை பெற்றுவிட்டால் அதனை இந்தியா முழுமைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது செப்டம்பர் முதல்வாரத்திலிருந்து அமலுக்கு வரவுள்ளது.
முன்பு கூறப்பட்டது போலவே 72 மணி நேரத்துக்குள் இந்த ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். இதனை ஐடியா வெப்சைட், ஆப் மற்றும் முன்றாம் நபர் ஆப் மூலம் செய்யலாம். அல்லது ரீடெயில் ஸ்டோர் மூலமாகவும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் மற்று டேட்டா ரீசார்ஜ்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
வோடாபோனின் செயல்பாட்டு இயக்குநர் கொஸ்லா பேசுகையில் '' இது இந்த சீசனின் பெரிய விளம்பர ஆஃபர். இதில் 100 சதவிகிதம் உறுதியான ஆஃபர்கள் இருக்கும். அனைத்து வாடிக்கையாளருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்த ஆஃபர் அமையும்" என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
OnePlus 15 India Launch Date Announced; to Debut as First Snapdragon 8 Elite Gen 5 Phone in India