உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இந்தியாவில் இயங்கும் விமானங்களுக்கு, பயணிகளுக்கு விமானத்தில் வைஃபை சேவைகளை வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
விமானப் பயணிகள் தங்கள் மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஈ-ரீடர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தப்படும்போது, விமானத்தின் வைஃபை மூலம் இணைய சேவைகளை அணுக பைலட்-இன்-கமாண்ட் அனுமதிக்கும். இந்த மின்னணு சாதனங்களை ப்ளைட் மோட் அல்லது ஏரோபிளேன் மோடில் பயன்படுத்த வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை எவரெட்டில் தனது முதல் போயிங் 787-9 விமானத்தை டெலிவரி செய்யும் போது, விஸ்டாரா தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி தங் (Leslie Thng) செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் விமானத்தில் வைஃபை சேவைகளை வழங்கும் முதல் விமானம் இதுவாகும் என்றார்.
நினைவுகூர, 2018-ஆம் ஆண்டில், தொலைத் தொடர்பு ஆணையம் விமான இணைப்பிற்கு ஒப்புதல் அளித்தது, குரல் மற்றும் டேட்டா அழைப்புகள் மற்றும் இந்திய வான்வெளியில் டேட்டா உலாவல் ஆகிய இரண்டையும் எளிதாக்கியது.
"இது தொடர்பான இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI - Telecom Regulatory Authority of India) கிட்டத்தட்ட அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் இந்த செயல்முறையை விரைவுபடுத்துகிறோம் (தொடங்க) 3-4 மாதங்களுக்குள் இது தயாராக இருக்க வேண்டும். இந்த முடிவை உடனடியாக செயல்படுத்துவோம்," தொலைத்தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் 2018-ல் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
"இன்-ஃப்ளைட் இணைப்பு வழங்குநர் என்று அழைக்கப்படும் ஒரு தனி வகை உரிமதாரரை நாங்கள் உருவாக்க வேண்டும். இது கப்பல்களுக்கும் பொருந்தும். ரூ.1 டோக்கன் உரிமக் கட்டணமாக இருக்கும். இது 3,000 மீட்டருக்கு மேல் பொருந்தும்" என்று சுந்தரராஜன் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்