பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள், இந்த புதிய மாற்றத்தை பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை பெறலாம்.
BSNL, சென்னை மற்றும் தமிழக வட்டங்களில் இந்த விளம்பர சலுகையை கொண்டு வந்துள்ளது
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ரூ.999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானுக்கு 30 நாட்கள் கூடுதல் செல்லுபடியை வழங்குவதற்கான விளம்பர சலுகையை அறிவித்துள்ளது. சமீபத்திய வளர்ச்சியுடன், ரூ.999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ப்ளான் 270 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது தற்போதுள்ள 240 நாட்கள் செல்லுபடியை விட அதிகரித்து காட்டுகிறது. இந்த அப்டேட் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் பொருந்தும். பிஎஸ்என்எல் சமீபத்தில், அதன் செல்லுபடியை 300 நாட்களாகக் குறைப்பதன் மூலம், ரூ.1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை திருத்தியது.
பிஎஸ்என்எல் சென்னை தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ரூ.999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை சென்னை மற்றும் தமிழக சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது. விளம்பர சலுகைக் காலத்தில் செய்யப்பட்ட ரீசார்ஜ், ப்ளானின் மொத்த செல்லுபடியாகும் தன்மை 270 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் கிடைக்கக்கூடிய ரீசார்ஜ் முறைகள் மூலம் சலுகையைப் பெறலாம்.
ரூ.999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் செல்லுபடியாகும் காலம் முழுவதும் 250 நிமிட குரல் அழைப்புகளை 60 நாட்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோன்களுக்கான (personalised ringback tones - PRBT) அணுகலுடன் வழங்குகிறது. இருப்பினும், அதிவேக டேட்டா பலன்கள் இதில் இல்லை.
விளம்பர சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் பிற வட்டங்களில் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.
டெலிகாம் டாக் ஆரம்பத்தில், ரூ.999 ப்ரீபெய்ட் ப்ளானுக்கு பொருந்தக்கூடிய விளம்பர சலுகையை கண்டறிந்தது. இருப்பினும், பிஎஸ்என்எல் தளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் கேஜெட்ஸ் 360 புதுப்பிப்பை சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது.
கடந்த மாதம், பிஎஸ்என்எல், முந்தைய 365 நாட்களில் இருந்து 300 நாட்களாக அதன் செல்லுபடியைக் குறைப்பதன் மூலம் “மருதம்” எனப்படும் ரூ.1,188 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை திருத்தியது. ரூ.1,188 ப்ளான் 250 நிமிட குரல் அழைப்புகள் மற்றும் 5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 1,200 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Facebook App Update Brings Redesigned Feed, Search, Navigation Interfaces Alongside New Search Algorithm