71-வது குடியரசு தினத்தை கொண்டாடும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ. 1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் கூடுதலாக 71 நாட்கள் வழங்கவுள்ளது. புதிய சலுகை ஜனவரி 26 முதல் செல்லுபடியாகும் என்று கூறப்படுகிறது. ரூ. 1,999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் பொதுவாக 365 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. இருப்பினும், சமீபத்திய சலுகை செல்லுபடியாந்து 436 நாட்களுக்கு நீட்டிக்கிறது. ரூ. 1,999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ப்ளான் என்பது அரசுக்கு சொந்தமான டெல்கோவின் நீண்டகால சலுகைகளில் ஒன்றாகும். அவை, அதிவேக டேட்டா அணுகல், அன்லிமிடெட் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் செய்தி பலன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
436 நாட்கள் அதிகரித்த செல்லுபடியுடன், ரூ. 1,999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15 வரை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல்-மையப்படுத்தப்பட்ட வலைப்பதிவு பிஎஸ்என்எல் டெலிசர்வீசஸ் தெரிவித்துள்ளது. வரும், ஜனவரி 26, ஞாயிற்றுக்கிழமையன்று, 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்த கூடுதல் செல்லுபடியை வழங்கும்.
அதிகரித்த செல்லுபடியைத் தவிர, ரூ. 1,999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் கூடுதல் பலன்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நுகர்வோர் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளுடன், தினசரி 3 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவார்கள். இந்த ப்ரீபெய்ட் ப்ளான், அன்லிமிடெட் பாடல் மாற்ற ஆப்ஷனுடன் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன்களுக்கான (personalised ring back tones - PRBT) அணுகலை வழங்குகிறது.
கேஜெட்ஸ் 360-க்கு ரூ. 1,999 ப்ரீபெய்ட் ப்ளானின் குடியரசு தின சலுகையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இருப்பினும், பிஎஸ்என்எல் அதன் ஆன்லைன் இருப்பு மூலம் விரைவில் அதை பகிரங்கப்படுத்த வாய்ப்புள்ளது.
நினைவுகூர, பிஎஸ்என்எல் ரூ. 1,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான், ஜூன் 2018-ல் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த ப்ளான் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்கியது, இருப்பினும் இது கடந்த ஆண்டு அப்டேட்டை பெற்றது மற்றும் 3 ஜிபி தினசரி அதிவேக டேட்டா பலன்களை வழங்கத் தொடங்கியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்