தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்-ன் 1,188 ரூபாய் மதுரம் ப்ரீபெய்ட் திட்டம், சிறப்பு என்ன?

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்-ன் 1,188 ரூபாய் மதுரம் ப்ரீபெய்ட் திட்டம், சிறப்பு என்ன?

இந்த புதிய திட்டம் ஜூலை 25 தேதியிலிருந்து அறிமுகமானது.

ஹைலைட்ஸ்
  • நாடு முழுவதும் இலவச தொலைபேசி அழைப்பு
  • இந்த திட்டத்தின் வேலிடிட்டி 345 நாட்கள்
  • 1,399 ரூபாய் மற்றும் 1,001 ரூபாய் என்ற விலையில் இரண்டு புதிய திட்டங்கள்
விளம்பரம்

பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்)  நீண்ட கால வேலிடிட்டி கொண்ட புதிய 1,188 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 1,188 ரூபாய் மதுரம் ப்ரீபெய்ட் வவுச்சர் திட்டம், தமிழ்நாடு அரசு நடத்தும் டெல்கோ நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 25 தேதியிலிருந்து அறிமுகமானது. 345 நாட்கள் வேலிடிட்டியை கொண்டு இந்த திட்டம் குறைந்த டேட்டா சலுகைகளை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டம், ஆந்திராவில் 1,399 ரூபாய் என்ற விலையிலும் மற்றும் தெலுங்கானா 1,001 ரூபாய் என்ற விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்திலேயே அறிமுகமாகியுள்ளது.

புதிய பி.எஸ்.என்.எல் 1,188 ரூபாய் மதுரம் திட்டம்  5GB டேட்டா, மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இலவச அழைப்புகள் மற்றும் 345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 1,200 மெசேஜ்களை இலவசமாக வழங்குகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் நேரலையில் உள்ளது, இந்த திட்டத்தின் 5GB டேட்டாவை பயன்படுத்திய பிறகு, பிஎஸ்என்எல் பயனர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு MB டேட்டாவிற்கும் 25 பைசா வசூலிக்கப்படும். தற்ற்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டுமே அறிமுகமாகியிருக்கும் இந்த திட்டத்தை நாட்டின் பிற தொலைத் தொடர்பு வட்டங்களுக்கும் விரிவுபடுத்துமா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால வேலிடிட்டி கொண்ட 1,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் 1.5GB தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 50 மெசேஜ்கள் மற்றும் 270 நாட்களுக்கு அளவற்ற தொலைபேசி அழைப்புகள் ஆகிய சலுகைகளை வழங்குகிறது. ரூ. 1,001 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் 270 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இருப்பினும் இந்த 9GB டேட்டா மற்றும் 270 மெசேஜ்கள் மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளை மட்டுமே வழங்குகிறது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »