மாநிலத்திற்கு சொந்தமான பாரத் சான்சார் நிதம் நிறுவனம் (பி.எஸ்.என்.எல்) தனது விங்ஸ் இணைய வசதி பற்றிய அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதை தொடர்ந்து முன்னனி தனியார் துறையினர்க்கு சவால் விடும் வகையில் தனது செயலியை கூகுள் பிளேவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விங்ஸ் இணைய சேவையை இம்மாதம் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 1,099 ரூபாய்க்கு ஆரம்ப ஆஃபர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
மொபைல் எண்களை போல ஐபி முகவரி இருப்பதால், இணையத்தின் வழியாக கால்கள் செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும் என நம்பப்படுகிறது.இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள, ஆன்லையினில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அடையாள அட்டை, முகவரி ஆவணம் மற்றும் கனெக்சன் பெரும் நபரின் புகைப்படம் தேவைப்படும். 10 டிஜிட் ஐபி முகவரி எண்களை தேர்வு செய்த பிறகு பின் எண்களை பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து கூகுள் பிளேவில் (பி.எஸ்.என்.எல்) செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் இலவச காலம் முடிவடைந்த பின்னர் ரூபாய்.1099 பணம் செலுத்தி இந்திய முழுவதும் கால்கள் செய்ய முடியும். மாணவர்கள், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பிஎஸ்யூ ஊழியர்களுக்கு கூடுதல் தள்ளுபடி அளிக்கப்படும்.
மொபைல் கவரேஜ் இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கவர்வதே இந்த சேவையின் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய சேவை மூலம் ப்ராட்பாண்ட், வைஃவ்ய், 4ஜி/ 3ஜி இன்டர்நெட் ஆகியவற்றை பயன்படுத்தி போன் கால்கள் செய்ய முடியும். விங்ஸ் முதல் விங்ஸ் கஸ்டமர்களுக்கு வீடியோ காலிங் வசதி இடம்பெற்றிறுக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்