குடியரசு தினமான இன்று, பிஎஸ்என்எல் நிறுவனம், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
269 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பேக் மூலம், 2.6 ஜிபி டேட்டா, 260 எஸ்எம்எஸ், 2600 நிமிடங்கள் காலிங் உள்ளிட்ட வசதிகளை பெறலாம். 26 நாட்களுக்கு இந்த புதிய பேக்கின் வேலிடிட்டி இருக்கும். இந்த பேக் லிமிட்டெட் எடிஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை மட்டும்தான் இந்த புதிய பேக் வசதியை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய முடியும்.
அனைத்து ரீசார்ஜ் கடைகளிலும் இந்த பேக் குறித்து கேட்டு வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனம், சமீபத்தில்தான் 899 ரூபாய் பேக் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பேக்கின் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்.எம்.எஸ் வசதியை 180 நாட்களுக்கு தொடர்ந்து பெற முடியும்.
ஜியோ நிறுவனம், செல்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்