ஏர்டெல் தனது தளத்தில் தள்ளுபடி சலுகையையும் பெங்களூரு மற்றும் சென்னை வட்டங்களுக்கான MyAirtel app-ஐயும் பட்டியலிட்டுள்ளது. ஏர்டெல் இணையதளத்தில் கிடைக்கும் பேனரின் படி, புதிய சலுகை இன்று இரவு வரை செல்லுபடியாகும்.
ஏர்டெல் தனது பெங்களூரு மற்றும் சென்னையில் இருக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடி சலுகையை பட்டியலிட்டுள்ளது
தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்கும், Jio Fiber மற்றும் ACT Fibernet போன்றவற்றைப் பெறுவதற்கும் பாரதி ஏர்டெல் அதன் புதிய பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடியை வழங்குகிற்அது. தற்போது பெங்களூரு மற்றும் சென்னையில் நேரலையில் காணப்படும் இந்த புதிய சலுகை ஒரு குறிப்பிட்ட கால விளம்பரமாக கிடைக்கிறது, மேலும் ஏர்டெல் வலைத்தளம் (Airtel website) மற்றும் மை ஏர்டெல் செயலி (MyAirtel app) மூலம் அணுகலாம். நுழைவு நிலை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 799 பிராட்பேண்ட் திட்டத்தை முதல் மாதம் இலவசமாகப் பெறலாம்.
ஏர்டெல் தனது தளத்தில் தள்ளுபடி சலுகையையும் பெங்களூரு மற்றும் சென்னை வட்டங்களுக்கான MyAirtel app-ஐயும் பட்டியலிட்டுள்ளது. ஏர்டெல் இணையதளத்தில் கிடைக்கும் பேனரின் படி, புதிய சலுகை இன்று இரவு வரை செல்லுபடியாகும்.
புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் தளம் (Airtel site) அல்லது மை ஏர்டெல் செயலியில் (MyAirtel app) இருந்து பட்டியலிடப்பட்ட திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது தள்ளுபடி சலுகையைப் பெறலாம். புதிய பிராட்பேண்ட் இணைப்பிற்கான ஆர்டரை வெற்றிகரமாக முடித்தவுடன் இந்த தள்ளுபடி பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் டாக் குறிப்பிட்டுள்ளபடி ரூ. 799 பிராட்பேண்ட் திட்டம், தள்ளுபடி சலுகை முதல் மாத வாடகையை ரத்து செய்கிறது.
அக்டோபரின் பிற்பகுதியில், ஏர்டெல் தனது பிராட்பேண்ட் திட்டங்களை திருத்தி, அன்லிமிடெட் அதிவேக டேட்டாவை மாதம் ரூ. 299-க்கு வழங்குகிறது. ஆபரேட்டர் தனது பிராட்பேண்ட் சேவையை ‘Airtel Xstream Fibre' என்று மறுபெயரிட்டது. திருத்தப்பட்ட திட்டங்களின்படி, 1Gbps வேகம் மற்றும் Netflix, Amazon Prime மற்றும் Zee5 சந்தா போன்ற தொகுக்கப்பட்ட பலன்களுடன், ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை ரூ. 799-யில் இருந்து ரூ. 3,999 வரை செல்கிறது.
ரூ. 799 பிராட்பேண்ட் திட்டம் 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் 150 ஜிபி டேட்டா கொடுப்பனவு மற்றும் Xstream content-க்கு அன்லிமிடெட் அணுகலை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது டேட்டா கொடுப்பனவை ரூ.299 மாதந்திர கட்டணம் செலுத்துவதன் மூலம் அன்லிமிடெடாக உயர்த்துவதற்கான ஆப்ஷனும் உள்ளது.
அதன் திட்டங்களைத் திருத்துவதற்கு முன்னால், ஏர்டெல் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கான டேட்டா ரோல்ஓவர் வசதியை நிறுத்தியது, இது அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பயன்படுத்தப்படாமல் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?