ஏர்டெல் வைஃபை அழைப்பு இன்னும் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைக்கு பிரத்யேகமானது.
ஏர்டெல் வைஃபை அழைப்பு, பயனர்கள் செயலியை பதிவிறக்காமல் வைஃபை நெட்வொர்க்கில் அழைக்க அனுமதிக்கிறது
ஏர்டெல், இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அதன் பெயரிடப்பட்ட வைஃபை அழைப்பு சேவையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதுவரை இது டெல்லி NCR-க்கு மட்டுமே. மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற பெருநகர நகரங்களை உள்ளடக்கிய நாட்டின் பல பகுதிகளுக்கு தனது வைஃபை அழைப்பு சேவையின் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்துவதாக ஏர்டெல் இப்போது அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தனது வைஃபை அழைப்பு சேவையை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு வந்துள்ளது. விரிவாக்கத்தைத் தவிர, ஏர்டெல் தனது வைஃபை அழைப்பு சேவையைப் பயன்படுத்த சாம்சங் மற்றும் ஒன்பிளஸிலிருந்து அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவைச் சேர்த்தது.
"டெல்ல /NCR-ல் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதி ஏர்டெல் ("ஏர்டெல்"), இன்று தனது வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகப்படுத்தியது - மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள 'ஏர்டெல் வைஃபை அழைப்பு', ஏர்டெல் ஒரு அறிக்கையில் கூறியது.
வைஃபை அழைப்பு சேவைக்கு நன்றி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஒரு செயலியை நிறுவாமல் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் வைஃபை நெட்வொர்க்கில் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்டிற்கு ஏர்டெல் வைஃபை அழைப்பு இன்னும் பிரத்தியேகமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளுக்கு மேலும் ஆதரவை சேர்க்க திட்டமிட்டுள்ளது. ட்விட்டரில் பல பயனர்கள் ஏர்டெல் வைஃபை அழைப்பை மூன்றாம் தரப்பு பிராட்பேண்ட் சேவைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
கூடுதலாக, ஏர்டெல் தனது வைஃபை அழைப்பு சேவையை இயக்க கூடுதல் போன்களுக்கான ஆதரவையும் சேர்த்தது. ஏர்டெல்லின் இணையதளத்தில் (website) புதுப்பிக்கப்பட்ட வைஃபை அழைப்பு இணக்கமான போன்களின் பட்டியலில் இப்போது Galaxy S10, Galaxy S10e, Galaxy M20 மற்றும் பலவற்றையும் குறிப்பிடுகிறது. மேலும், ஏர்டெல்லின் செய்திக்குறிப்பில் OnePlus 6-சீரிஸ் போன்கள் இப்போது வைஃபை அழைப்போடு இணக்கமாக உள்ளன என்றும் குறிப்பிடுகிறது. இன்றைய நிலவரப்படி ஏர்டெல் வைஃபை அழைப்பை ஆதரிக்கும் அனைத்து போன்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் பின்வருமாறு:
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra Design Spotted in Leaked Hands-On Images