தமிழ்நாட்டில் வாய்ஸ் கிளாரிட்டி கூடுதல் தரமாக இருக்கும் – சொல்கிறது ஏர்டெல்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
தமிழ்நாட்டில் வாய்ஸ் கிளாரிட்டி கூடுதல் தரமாக இருக்கும் – சொல்கிறது ஏர்டெல்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஏர்டெல் நெட்வொர்க்கின் வாய்ஸ் கிளாரிட்டி இன்னும் கூடுதல் தரமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “3ஜி நெட்வொர்க்கை பொறுத்தவரையில் அதிக கால்கள் செய்யப்படுகின்றன. அதனை மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் வாய்ஸ் கிளாரிட்டியை தரப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் எங்களது சிறந்த சேவையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

டேட்டாவை பொறுத்தவரையில், அதிக வேகத்துடன் 4ஜி கவரேஜை அதிகப்படுத்தியுள்ளோம். தரப்படுத்தப்பட்ட 4ஜி சேவையுடன் ஏர்டெல் வோல்ட் மூலம் துல்லியமான ஒலியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம். நாடு முழுவதும் 4ஜி பயன்பாடு அதிகரித்து வருவதால் அதனை சிறப்பாக வழங்க அதிக முதலீடு செய்துள்ளோம்.

இந்தியாவிலேயே வேகமான நெட்வொர்க் என்ற பெயரை ஏர்டெல் பெற்றுள்ளது. எங்களது வாடிக்கையாளர்கள துல்லியமான வாய்ஸ் சேவைகளை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் எங்களுக்கு 2.3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்களது “ப்ராஜெக்ட் லீப்” திட்டத்தின் மூலம் 12 ஆயிரம் இடங்களில் ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பொருத்தவுள்ளோம். இதன் மொத்த நீளம் 3 ஆயிரம் கிலோ மீட்டர்.” என்று ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. இரட்டை செல்ஃபி கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் அறிமுகம்!
  2. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்!
  3. 48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!
  5. 4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!
  6. விவோ ஒய் 70 எஸ் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்!
  7. பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!
  8. சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்!
  9. குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்!
  10. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com