புதிய திட்டங்களை அறிவித்துள்ள ஏர்டெல்! ரீ-சார்ஜ் செய்தால் 4 லட்சம் லைப் இன்சூரன்ஸ்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 10 மே 2019 16:44 IST
ஹைலைட்ஸ்
  • 129 ரூபாய் மற்றும் 249 ரூபாய்க்கு இரண்டு புதிய திட்டங்கள்
  • 249 ரூபாய்க்கு 4 லட்சம் ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசி
  • 129 ரூபாய்க்கு 2GB டேட்டா, அளவற்ற தொலைபேசி அழைப்புகள்

ஏர்டேல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது


நேற்று பி எஸ் என் எல் நிறுவனம், தொலைத்தொடர்புத்துறையில் தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள, 47 ரூபாய்க்கு மற்றும் 198 ரூபாய்க்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று ஏர்டெல் நிறுவனம், இந்த போட்டியில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் 129 ரூபாய்க்கு 1GB-யாக இருந்த டேட்டாவை 2GB-யாக உயர்த்தி வழங்கியுள்ளது, மற்றும் 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 4 லட்சம் ரூபாய்க்கு லைப் இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ஏர்டெல் 129 ரூபாய் திட்ட விவரங்கள்:

இந்த திட்டத்தில் நீங்கள் 129 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும், 100 சாதாரன மெசேஜ்களும், மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் வழங்கவுள்ளது, ஏர்டெல் நிறுவனம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள். இதுமட்டுமின்றி ஏர்டெல் டிவி மற்றும் வின்க் மியூசிக் ஆகிய இரண்டிற்கும், ஒரு மாத சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்தில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 1GB டேட்டா, 100 சாதாரன மெசேஜ்கள், மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளை வழங்கியது. மற்ற வாடிக்கையாளர்கள், இந்த ப்ளானில் ரீ-சார்ஜ் செய்தால், அவர்களுக்கு ஒரு மாத அளவற்ற தொலைபேசி அழைப்புகள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தளம் மற்றும் ஏர்டெல் செயலியில், அந்த பழைய திட்டம், நீக்கப்பட்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏர்டெல் 249 ரூபாய் திட்ட விவரங்கள்:

இந்த திட்டத்தில் டேட்டா, மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்புகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவராத ஏர்டெல் நிறுவனம், இந்த திட்டட்தில் ரீ-சார்ஜ் செய்பவர்களுக்கு 4 லட்சம் மதிப்புள்ள லைப் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த பாலிசியை எச் டி எப் சி லைப் மற்றும் பாரதி ஆக்சா மூலம் வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். மேலும் இந்த திட்டத்தின் மூலம், ஏர்டெல் டிவி சந்தா, வின்க் மியூசிக் சந்தா, நீங்கள் புது 4G போனை வாங்கினால் 2000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் 1 வருட நார்டன் செக்கியூரிடி என பல சலுகைகளை வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் நீங்கள் 249 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும், 100 சாதாரன மெசேஜ்களும், மற்றும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் 28 நாட்களுக்கு வழங்கவுள்ளது. ஏர்டெல் தளம் மற்றும் ஏர்டெல் செயலியின் வாயிலாக இந்த திட்டத்தை ரீ-சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த லைப் இன்சூரன்ஸ் பாலிசியை வாடிக்கையாளர்கள் பெற சில முக்கிய விதிகளையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் 18 முதல் 54 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தை இடைவிடாமல், தொடர்ந்து ரீ-சார்ஜ் செய்ய வேண்டும். இந்த இன்சூரன்ஸ்-ஐ தங்கள் மொபைல்போனில் எஸ் எம் எஸ் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேவையான சான்றுகளை, பதிவேற்ற வேண்டும். மேலும், இந்த இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் ஏர்டெலில்- அதிகாரப்பூர்வமான கடைகளில் கைப்படவும் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற தகவல்களை கூறியுள்ளது, ஏர்டெல் நிறுவனம்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் இந்த ஆண்டு மடிக்கக்கூடிய ஐபோன் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக்அல்ட்ராவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது
  2. ஸ்பாட்டிஃபை : புதிய கைடட் வொர்க்அவுட் அனுபவத்தின் மூலம் ஆப்பிள் ஃபிட்னஸ்+ மற்றும் ஃபிட்பிட்டிற்கு சவால்
  3. 6,000mAh பேட்டரி, 6.9" திரை மற்றும் Unisoc T7250 சிப்செட்டுடன் போக்கோ C81 ப்ரோ அறிமுகம்: விலை & சிறப்பம்சங்கள்
  4. எச்எம்டி வைப் 2 5ஜி இந்தியாவில் அறிமுகம்: இதன் எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரங்கள்
  5. சாம்சங் கேலக்ஸி கிளாசஸ்: ரே-பான் மெட்டா போன்ற வடிவமைப்பு மற்றும் ஜெமினி ஒருங்கிணைப்புடன் வர வாய்ப்பு
  6. ஜேபிஎல் பார் MK2 சவுண்ட்பார்கள் இந்தியாவில் அறிமுகம்: இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. ஒன்பிளஸ் நோர்ட் CE 6 லைட்: இந்தியாவில் அறிமுகமாகும் இதன் விலை, சிப்செட் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
  8. ஏர்டெல் vs ஜியோ: ரூ. 1,000-க்கு கீழ் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் ஒப்பீடு
  9. அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026: ரூ. 30,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள்
  10. இன்ஸ்டாகிராமில் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி டூ-ஃபாக்டர் அத்தென்டிகேஷனை எவ்வாறு இயக்குவது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.