சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட், இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த டேப்லெட் எஸ் பென்னுடன் வருகிறது. சாம்சங் இப்போது டேப்லெட்டின் விலையையும், வெளியீட்டு தேதியையும் வெளியிடவில்லை, இருப்பினும் சாம்சங் இந்தோனேசியா பட்டியல், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை வெளிப்படுத்துகிறது. இந்த டேப்லெட், Angora Blue, Chiffon Pink மற்றும் Oxford Grey கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும்.
Samsung Galaxy Tab S6 Lite, 10.4 அங்குல WUXGA (1,200x2,000 பிக்சல்கள்) டிஎஃப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த டேப்லெட், ஒன் யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். டேப்லெட்டின் முன் பேனலில் தடிமனான பெசல்கள், ஹோல்-பஞ்சில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. பின் பேனலில், ஆட்டோ ஃபோகஸுடன் ஒற்றை 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த கேமரா 30fps-ல் 1080p வீடியோக்களை எடுக்கும்.
கேலக்ஸி டேப் எஸ் 6 லைட், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக (1 டிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த டேப்லெட்டில் 3.5 மிமீ ஆடியோ ஜாக், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5.0 மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு உள்ளது. இந்த டேப்லெட் 7,040 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 13 மணி நேரம் வீடியோ பிளேபேக்கை வழங்கும். இந்த டேப்லெட், 244.5x154.3x7.0 மிமீ அளவு மற்றும் 467 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்