அறிமுகமாகியுள்ள 'ப்ரிவியூ' வசதி மூலம் தேர்வு செய்த ஃபைலை யாருக்காவது அனுப்புவதற்கு முன்னர் சரியானத எனப் பார்க்க முடியும்!
ஐஓஎஸ் போன்களில் சோதனையில் இருக்கிறது இந்த அப்டேட்
வாட்ஸ் ஆப் செயலி தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல அப்டேட்களை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. டார்க் மோட்( Dark Mode ), குரூப் இன்விடேஷன் (Group Invitation) ஆகிய அப்டேட்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதிதாக 'அட்வான்ஸ்டு சர்ச்' (Advanced Search) வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதி, ஐஓஎஸ் தளத்தில் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் விரையில் அண்ட்ராய்டு போன்களுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த புதிய அப்டேட், வாடிக்கையாளர்களை புகைப்படங்கள், ஆடியோக்கள், ஜிஃப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மால் தேட முடியும்.
மேலும் இந்த அமைப்பின் மூலம் நமது சமீபத்திய தேடல்களையும் நம்மால் பார்க்க முடியும்.
வாட்ஸ் ஆப்பில் ஏற்கெனவே நமது 'சாட்களை' தேடும் வசதியுள்ள நிலையில், இந்த புதிய 'அட்வான்ஸ்டு சர்ச்' மூலம் பல சாட்கள் மற்றும் புகைப்படங்களை நம்மால் தேட முடியும். வலது புறத்தில் இருக்கும் இந்த டாப்-ஐ தேர்வு செய்த பின்னர் இதுவரை போனில் உள்ள மொத்த ஃபைல்களையும் தேடியெடுக்க முடியும்.
மேலும் இதில் அறிமுகமாகியுள்ள 'ப்ரிவியூ' வசதி மூலம் தேர்வு செய்த ஃபைலை யாருக்காவது அனுப்புவதற்கு முன்னர் சரியானதா எனப் பார்க்க முடியும். மேலே குறப்பிட்டுள்ளதுபோல கட்டமைப்பில் உள்ள இந்த அப்டேட்டை பெற ஐஓஎஸ் பயனர்கள் 'டெஸ்ட் ஃபிளைட்' (Test Flight) செயலியை பயன்படுத்த வேண்டும்.
இந்த புதிய அப்டேட் வாட்ஸ் ஆப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series