மிகவும் பிரம்மாண்டமான அறிவிப்பு ஏதுமின்றி கூகுள் தனது மொபையில் வெப் வெர்ஷனுக்கு ‘வாய்ஸ் சர்ச்' அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள கூகுள்.காம் இணையதளத்திற்கு "வாய்ஸ் சர்ச்" என்னும் விருப்பம் நெடுநாட்களாக இல்லாமல் இருந்தது.
ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் இந்த அப்டேட் வராத நிலையில் இந்த மொபைல் வெர்ஷன் தற்போது குரோம் மற்றும் எட்ஜ் உலாவிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த 'வாய்ஸ் சர்ச்' வசதியை கூகுள்.காம்மில் உள்ள சாம்பல் நிற மைக்கை தேர்தெடுப்பதன் மூலம் நம்மால் பயன்படுத்த முடியும்.
இந்த ஜகான் (icon) கூகுளின் ஹோம் பேஜ் மற்றும் தேடுதல் தளத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும் அதை தேர்ந்தெடுப்பதன் மூலம் கூகுள் தளம் நமது கட்டளைக்காக காத்திருக்கும். முழுமையாக கேட்ட பிறகு கட்டளைக்கு பொருத்தமான தேடல் முடிவுகளை தேடுதல் தளத்திற்கு கொண்டு வருகிறது.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்டு மூலம் கட்டளைகளை நாம் சொல்ல முடிகின்ற நிலையில், இந்த அப்டேட் டைபிங்கின் அவசியத்தை குறைக்கிறது. ஜபோனில் இன்னும் இந்த அப்டேட் வராத நிலையில் ஜி-போர்டில் உள்ள வாய்ஸ் உதவியின் மூலம் தேடுதல் நடைபெறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்