அமெரிக்க நிறுவனங்களான அமேசான்.காம், ஆப்பிள் சீனா நாட்டின் ஹூவாய், அலிபாபா போன்ற நிறுவனங்களுக்கு தனி நபர் தகவல் பகிரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தனிநபர் தகவல்களை மற்ற நிறுவனங்களுடன் பரிமாற்றம் செய்ததாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மொபைல் போன்களில், சிறப்பான பேஸ்புக் பயன்பாட்டினை வாடிக்கையாளர்கள் பெறுவதற்காக, தகவல் பரிமாற்றம் செய்ததாக தெரிவித்துள்ளது
அமெரிக்க நிறுவனங்களான அமேசான்.காம், ஆப்பிள், மைக்ரோசாப்ட், தென் கொரியாவின் சாம்சங், சீனா நாட்டின் ஹூவாய், அலிபாபா போன்ற முன்னனி நிறுவனங்களுக்கு தனி நபர் தகவல் பகிரப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
“தகவல் பரிமாற்றம் மூலம், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் உபயோகிக்கும் முறையை சீராக்க இந்த நடவடிகை எடுக்கப்பட்டது. இந்த தகவல் பரிமாற்றம் முறையை நிறுவனங்கள் மேற்கொள்வதற்கு பேஸ்புக் அனுமதி அளித்தது” என்று பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
53 பங்குதாரர்களில் 38 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை பேஸ்புக் நிறுவனம் நிறுத்திக்கொண்டது. மேலும் ஏழு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை நிறுத்தி கொள்ள போவதாக அறிவித்துள்ளது
ஏற்கனவே, தனி நபர் தகவல்களை வெளி நிறுவனங்களுடன் பகிர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டது. அதற்கு, தொழில்நுட்ப துறை, பொது மக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பர்கிடம், அமெரிக்கா ஹவுஸ் எனர்ஜி மற்றும் வணிக குழு சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய 1200 கேள்விகளுக்கு, 747 பக்க பதிலை பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்க போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, காம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்திற்கு 87 மில்லியன் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. அதில் 71 மில்லியன் அமெரிக்கர்களின் தகவல்கள்களும் அடங்கும்
டேட்டா பகிரும் வழக்கம் குறைவதற்கு முன்னர், ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் நண்பர்களின் பேஸ்புக் படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதைப் போல, ப்ளாக் பெர்ரி பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த காம்ப்ரிட்ஜ் அனலெட்டிக்கா சர்சைக்கு பிறகு, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நீதிமன்றத்தில் விசாரணைக்கு அளிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 500 பக்க பதிலை அளித்தது பேஸ்புக் நிறுவனம்.
காம்ப்ரிட்ஜ் அனலெட்டிக்கா திறட்டிய தகவல்களை வைத்து, அமெரிக்க தேர்தலின் போது குடியரசு வேட்பாளர்களுக்கு சாதகமாக குறுஞ்செய்திகள் அனுப்ப பேஸ்புக் நிறுவனம் உதவி செய்தது.
எனினும்,பல கேள்விகளுக்கு பேஸ்புக் நிறுவனத்தால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. குறிப்பாக, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை சரியாக கூறவில்லை. இதனால் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket