இன்று நள்ளிரவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான (இஸ்ரோ) சார்பாக விண்வெளிக்கு செயற்கை கோள்கள் அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பிஸ்எல்வி-சி44 என்னும் விண்கலத்தில் இரண்டு செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புகைப்படம் எடுக்க உதவும் மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கை கோளும் மாணவர்களால் உறுவாக்கப்பட்ட கலாம்சாட் என்னும் தொலைத்தொடர்பு செயற்கை கோளும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சத்தீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
சரியாக இரவு 11.37 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ள பிஸ்எல்வி-சி 44 என்னும் ராக்கேட், நான்கு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெப்பமான மற்றும் குளிரான பாகங்களாக வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட் தனது நான்காவது பாகத்தில் சக்தியை முழுமையாக பயன்படுத்தி கலாம்சாட் மற்றும் மைக்ரோசாட்-ஆர் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.
இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிலாவில் ஆராய்ச்சி செய்ய இந்தியா சார்பாக இரண்டாவது முறையாக சந்திராயன்-2 கடந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் வரும் மார்ச் 25 மற்றும் ஏப்ரல் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்