Chandrayaan-2: இஸ்ரோ வெளியிட்ட நிலவு பள்ளங்களின் புதிய புகைப்படங்கள்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 27 ஆகஸ்ட் 2019 13:32 IST
ஹைலைட்ஸ்
  • இந்த படங்கள் ஆகஸ்ட் 23ல் சுமார் 4,375 கி.மீ உயரத்தில் எடுக்கப்பட்டுள்ளது
  • ஜாக்சன், மித்ரா, மாக் மற்றும் கொரோலெவ் பள்ளங்களைக் காட்டுகின்றன
  • படங்களை சந்திரயன் -2இன் டெர்ரைன் மேப்பிங் கேமரா -2 எடுத்தது

சந்திரயான் -2 புதிய படத்தை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்டது

Photo Credit: ISRO

சந்திரயான் -2 (Chandrayaan-2) செயற்கைகோளின் நிலப்பரப்பு மேப்பிங் கேமரா -2 எடுத்த சந்திரனின் மேற்பரப்பு மற்றும் அதன் பள்ளங்களின் புதிய புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) திங்கள்கிழமை வெளியிட்டது. இஸ்ரோவின் தகவலிம்படி, ஆகஸ்ட் 23 அன்று ஜாக்சன் (Jackson), மித்ரா (Mitra), மாக் (Mach) மற்றும் கொரோலெவ் (Korolev) போன்ற தாக்கக் பள்ளங்களைக் காட்டும் படங்கள் சுமார் 4,375 கி.மீ உயரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

ஜாக்சன் (Jackson) என்பது சந்திரனின் வெகு தொலைவில் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரு தாக்க பள்ளம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. பள்ளத்தின் விட்டம் 71 கி.மீ.

மாக் (Mach) பள்ளத்தின் மேற்கு வெளிப்புற விளிம்பில் அமைந்துள்ளது இந்த மித்ரா (Mitra) (92 கி.மீ விட்டம்) என்னும் மற்றொரு தாக்க பள்ளம்.

"இந்திய இயற்பியலாளராக இருந்த பேராசிரியர் சிசிர் குமார் மித்ரா மற்றும் அயனி மண்டல மற்றும் கதிரியக்க இயற்பியல் துறையில் முன்னோடிப் பணிகளுக்காக அறியப்பட்ட பத்ம பூஷண் விருது பெற்ற அவரின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

படத்தில் காணப்படும் கொரோலெவ் (Korolev) பள்ளம் 437 கி.மீ அகலமுள்ள பள்ளம் ஆகும், இது மேலும் பல சிறிய அளவிலான பள்ளங்களைக் கொண்டுள்ளது.

இதுமட்டுமின்றி சோமர்ஃபெல்ட் (Sommerfeld) மற்றும் கிர்க்வுட் (Kirkwood) போன்ற தாக்க பள்ளங்களைக் காட்டும் படங்களையும் இஸ்ரோ வெளியிட்டது.

சோமர்ஃபெல்ட் என்பது சந்திரனின் தொலைதூர வடக்கு அட்சரேகைகளில் அமைந்துள்ள ஒரு பெரிய தாக்க பள்ளம். இது 169 கி.மீ விட்டம் கொண்டது.

இது ஒரு வளைய மலையால் சூழப்பட்ட ஒப்பீட்டளவில் தட்டையான உட்புறத்தைக் கொண்டுள்ளது மற்றும் பல சிறிய பள்ளங்கள் இதன் விளிம்பில் உள்ளன.

அணு மற்றும் குவாண்டம் இயற்பியல் துறையில் ஒரு முன்னோடி ஜெர்மன் இயற்பியலாளர் டாக்டர் அர்னால்ட் சோமர்ஃபெல்ட் (Dr. Arnold Sommerfeld) என்பவரின் பெயரால் இது பெயரிடப்பட்டது. மற்றொரு பள்ளம் அமெரிக்க வானியலாளர் டேனியல் கிர்க்வுட் (Daniel Kirkwood) என்பவரின் பெயரால் கிர்க்வுட் என பெயரிடப்பட்டுள்ளது, இது நன்கு உருவாக்கப்பட்ட மற்றொரு தாக்க பள்ளம், இது சுமார் 68 கி.மீ விட்டம் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement

மற்றொரு படம் தாக்கக் குழிகள் பிளாஸ்கெட் (Plaskett) (109 கி.மீ அகலம்), ரோஜ்டெஸ்ட்வென்ஸ்கி (Rozhdestvenskiy) (177 கி.மீ அகலம்) மற்றும் ஹெர்மைட் (Hermite) (104 கி.மீ அகலம், சூரிய மண்டலத்தின் குளிரான இடங்களில் ஒன்று) ஆகியவற்றை காண்பிக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: ISRO, Chandrayaan 2, Moon
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.