ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்துகொண்டிருக்கும் 'உலக மெபைல் காங்கிரஸ் 2019' நிகழ்சியில் பல முன்னணி தொழிநுட்ப நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில், உலகமெங்கும் இருக்கும் தொழில்நுட்ப பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்சியில் உலகின் பல சிறந்த பிராண்டுகள் தங்களது மொபைல் வகைகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் சார்பாக இதுவரை சோனி எக்ஸ்பிரியா 1, சோனி எக்ஸ்பிரியா 10 மற்றும் சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் ஆகிய போன்கள் வெளியாகியுள்ளது.
இரண்டு நானோ சிம்களை கொண்ட சோனி எக்ஸ்பிரியா1 ஆண்டுராய்டு 9.0 பைய் மென்பொருள் மூலம் இயங்குகிறது. 6.5 இஞ்ச் நீளமுள்ள திரை, கார்னரிங் கோரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பை திரைக்கு தருகிறது.
மேலும் ஆக்டாகோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 SoC பிராசஸர் மற்றும் 6ஜிபி ரேமுடன் சோனி எக்ஸ்பிரியா 1 விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இதில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ள நிலையில் மூன்று கேமராக்களும் 12 மெகா பிக்சல் கேமரா சென்சாரை கொண்டுள்ளது.
சோனி எக்ஸ்பிரியா 1, 128 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 512 ஜிபி கூடுதலாக இணைத்துக்கொள்ளலாம். டைப் சி போர்ட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 3,300mAh பேட்டரி வசதியை பெற்றுள்ளது.
சோனி எஸ்பிரியா 10 சுமார் 24,800 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோனி எஸ்பிரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் சுமார் 30,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு போன்களுமே வரும் மார்ச் 18ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகும் நிலையில் இந்த போன்கள் கருப்பு, கடும் நீலம், ரோஸ் மற்றும் வெள்ளி நிறங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியாவில் இது வெளியாகும் தகவல் இன்னும் அறியப்படவில்லை.
இரண்டு போன்களும் பார்ப்பதற்கு ஓரே மாதிரி இருந்தாலும் சோனி எக்ஸ்பிரியா 10 போனை விட சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் விலை அதிகரித்துள்ளது. பவர், வால்யும் மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் போன்ற பட்டண்கள் வலது புறத்தில் அமைந்திருக்கும் நிலையில் சிம் டிரே இடதுபுறத்தில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க : 'உலக மொபைல் காங்கிரஸ் 2019' சோனி எக்ஸ்பிரியா1 அறிமுகம்; விலை என்ன தெரியுமா?
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்