'தி ஃபாமிலி ஹப்' என பெயரிடப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியை சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ளது
'தி ஃபாமிலி ஹப்' என பெயரிடப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியை சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ளது. ட்ரிப்பிள் கூலிங் டெக்னாலஜி கொண்ட 810-லிட்டர் ஃப்ரிட்ஜை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2,27,990 ரூபாய் மதிப்புள்ள இந்த ஃப்ரிட்ஜில் 21 இன்ச் டச்-ஸ்கிரீன் வசதி, பிக்ஸ்பி வாய்ஸ் கன்ட்ரோல் ஆகியவை கொண்டுள்ளது.
சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா இணையதளத்தில் இந்த ஃப்ரிட்ஜ் விற்பனைக்கான முன்பதிவு வரும் புதன் கிழமை தொடங்க உள்ளது. தொடக்க விற்பனை தள்ளுபடியாக, ஜுலை 31 ஆம் தேதிக்கு முன்பு ப்ரீபுக்கிங் செய்பவர்களுக்கு சாம்சங் காலக்சி S9 ஸ்மார்ட் போன் பரிசாக அளிக்கப்பட உள்ளது
தி ஃபாமிலி ஹப் ஃப்ரிட்ஜ், சாம்சங்கின் பிற ஸ்மார்ட் கருவிகளுடன் இயங்க கூடிய வசதி பெற்றுள்ளது. "வாடிக்கையாளர்கள் பார்த்திடாத வசதிகளுடன் தி ஃபாமிலி ஹப் வெளிவர உள்ளது. எளிமையாக பயன்படுத்த டெக்னாலஜி வசதிகள் கொண்டுள்ளது" என்று சாம்சங் இந்தியா, வாடிக்கையாளர் வணிக இயக்குனர் சவுரவ் கத்யால் தெரிவித்தார்.
பில்ட்-இன் கேமரா மூலம், இருக்கும் இடத்தில் இருந்து ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை ஸ்மார்ட் போன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம், ஃப்ரிட்ஜில் இல்லாத பொருட்களை வாடிக்கையாளர் வீடு திரும்பும் போது வாங்கி கொண்டு வரலாம்
குறிப்பாக, ரெசிபி ஆப் மூலம் வடையான ரெசிபி ஐடியாக்களை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸ்பி வாய்ஸ் கன்ட்ரோல் மூலம், செய்தி, வானிலை குறித்த தகவல்களையும் கேட்க முடியும்
மேலும், ஃப்ரிட்ஜில் உள்ள பில்ட்-இன் ஏகேஜி ஸ்பீக்கர் மூலம் ஸ்மார்ட் போன் ப்ளூடூத் கனெக்ட் செய்து பாடல்களை ஒலிக்க செய்யலாம். இறுதியாக, ஸ்மார்ட் ஃப்ரிட்ஜூம் விற்பனைக்கு வந்துவிட்டது!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Starlink Executive Clarifies: India Pricing Was a 'Glitch', Still Awaiting Launch Approval
Honor Robot Phone to Enter Mass Production in H1 2026, Tipster Claims