11 வருட ஆயுட் காலம் கொண்டது இந்த பல்ப்
16 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியது இந்த பல்ப்
எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் எம்ஐ.காம் தளத்தில் பல்ப் crowdfunding-கிற்காக லைவ் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் பல்ப் அமேசானின் குரல் உதவி அலெக்ஸாவுடனும் கூகுள் அசிஸ்டெண்டனுடனும் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் என்னவென்றால் இந்த எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப், 16,000 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்ககூடியது. 11 வருட ஆயுட் காலம் கொண்டது. இந்த ஸ்மார்ட் பல்பினை எம்ஐ ஸ்மார்ட் ஹோம் ஆப் மூலமாக கட்டுபடுத்த முடியும். எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப்பின் விற்பனை crowdfunding வழியாகவோ அல்லது Mi.com வழியாகவோ கிடைக்கும் என்று வெளியீட்டு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் விலை:
இந்தியாவில் எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப்பின் விலை இன்று அறிவிக்கப்பட்டது. பல்பின் முதல் 4000 யூனிட்டுகள் 999 ரூபாய்க்குக் கிடைக்கும். அதன் பிறகு பல்பின் விலை 1,299 ரூபாயாக உயரும். தற்போது பதிவு செய்யப்படும் பல்புகள், மே 20 ஆம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்படும்.
எம்ஐ எல்ஈடி ஸ்மார்ட் பல்ப் சிறப்பம்சங்கள்:
11 வருட ஆயுட் காலம் கொண்டது
16 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியது.
வண்ணங்களை எளிதில் மாற்றலாம்.
அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலமாகவும் எம்ஐ ஹோம் ஆப் மூலமாகவும் இந்த பல்பினை கட்டுப்படுத்த முடியும்.
வயர்லெஸ் மூலமாக இந்த பல்பினை ஆன் செய்யவும் ஆஃப் பண்ணவும் முடியும். அமைப்பு முறைகள் மற்றும் வண்ணங்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Motorola Signature Phone Design, Colourways Spotted in Renders That Match Motorola Edge 70 Ultra