Jays x-Five headphones, 20 மணி நேர பேட்டரி ஆயுளைக் கோருகிறது.
Jays x-Five headphones-ன் விலை ரூ. 3,999
ஸ்வீடிஷ் Headphones உற்பத்தியாளர் Jays இந்த வாரம் தனது Jays 'x-Five' Wireless Headphones-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். புதிய புளூடூத் ஹெட்செட் 20 மணிநேர பிளேடைம் வழங்குவதாக உறுதியளிக்கிறது. இது மடிக்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த மைக் மற்றும் கட்டுப்பாட்டு பொத்தான்களைக் கொண்டுள்ளது. Jays 'x-Five' Wireless Headphones MRP ரூ. 6,999. Headphone Zone-ல் தற்போது 3,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
Jays 'x-Five' Wireless என்பது இலகுரக மற்றும் கச்சிதமான over-the-ear ஹெட்செட் ஆகும். இது மடிக்கக்கூடியவை என்பதால் காதுகளில் அணிய சுலபமாக இருக்கும். இதற்கு memory foam padding உதவுகிறது.
இந்த Jays 'x-Five' Wireless Headphones, புளூடூத் v4.1 ஐ ஆதரிப்பதோடு, இணைப்புக்கு 10 மீட்டர் வரம்பைக் கொண்டுள்ளன. உள்ளமைக்கப்பட்ட SBC மற்றும் AAC codecs-க்கும் ஆதரவு உள்ளது. இந்தியாவில் தனது Jays 7-wireless headphone-களை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது.
Jays 'x-Five' Wireless Headphones உள்ளடிக்கிய பேட்டரியைக் கொண்டுள்ளன. மேலும், நிறுவனம் 20 மணி நேர பேட்டரி ஆயுளைக் கோருகிறது. இந்த சாதனம் முழுவதுமாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் எடுக்கும். மேலும் 300 மணிநேர நிலைப்பாட்டை கையாள முடியும். இடது ear cup-ல் சாதனத்தை சார்ஜ் செய்ய Micro-USB port உள்ளது. Jays 'x-Five' Wireless Headphones, 40mm audio drivers மற்றும் 32Hz - 18,000Hz frequency-ஐக் கொண்டுள்ளன. 150 கிராம் எடையுள்ள இந்த ஹெட்ஃபோன் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket