கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு மத்தியில் இந்தியாவில் லட்சக்கணக்கான N95 முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக சீன கைபேசி தயாரிப்பாளர் ஷாவ்மி திங்களன்று அறிவித்தார். இந்த முகமூடிகள் டெல்லி, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்களில் விநியோகிக்கப்படும் என்று ஷாவ்மி இந்தியாவின் உலகளாவிய துணைத் தலைவரும், ஷாவ்மி இந்தியாவின் நிர்வாக இயக்குநருமான மனு ஜெயின் தெரிவித்துள்ளார்.
கைபேசி தயாரிப்பாளர் ஷாவ்மி, எய்ம்ஸ் போன்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு ஹஸ்மத் அங்கிகளையும் (hazmat suits) வழங்கும்.
"Xiaomi இந்தியாவில், வணிகப் பயணங்களைக் குறைத்தல் மற்றும் வெளிப்புற மீரி போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம், ஊழியர்கள் மற்றும் அனைத்து கூட்டாளர்களும் பொது இடங்களில் முகமூடிகளை அணிந்துகொள்வதையும், தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதிசெய்கிறோம்" என்று ஜெயின் மேலும் கூறினார்.
கார்ப்பரேட் அலுவலகம், கிடங்கு, சேவை மையம், எம்ஐ ஹோம் மற்றும் உற்பத்தி ஆலை போன்ற ஒவ்வொரு வசதியும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கிய முடக்கத்தின் (lockdown) உத்தரவுகளுக்கு கட்டுப்படும் என்று கைபேசி தயாரிப்பாளர் கூறுகிறார்.
"எல்லா எம்ஐ ஹோம்ஸிலும், பயனர்கள் தங்களது நெருங்கிய எம்ஐ ஹோம்-ஐ அழைக்கவும், தங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போனை வீட்டு டெலிவரிக்கு ஆர்டர் செய்யவும் அனுமதிக்கும் 'டெலிவரி ஆன் கால்' சேவையை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். அனைத்து எம்ஐ ஹோம் ஊழியர்களும் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிந்துகொண்டு, வாடிக்கையாளர்களுக்காக தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று "ஜெயின் குறிப்பிட்டார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்