தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், ஏப்ரல் 20 முதல் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. "ஐடி வன்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்புகளும் அனுமதிக்கப்படுகின்றன," என்று அரசு கூறியுள்ளது. இதற்கு, உள்துறை அமைச்சகம், சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
coronavirus காரணமாக, இந்தியாவில் மொத்தம் 12,380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 414 பேர் இறந்துள்ளனர். மேலும், வைரஸுக்கு என்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், அதை தடுக்க சிறந்த வழி சமூக விலகல் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியதையடுத்து, தற்போது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மேலும். ஏப்ரல் 20-க்குப் பிறகு மக்களுக்கு சில சலுகைகள், கட்டுப்பாட்டி தளர்வுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தளர்வு அளிப்பது, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்படும் இழப்புகளைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"டிஜிட்டல் பொருளாதாரம், சேவைத் துறைக்கு மற்றும் தேசிய வளர்ச்சிக்கு முக்கியமானது. அதன்படி, இ-காமர்ஸ் செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவைகளின் செயல்பாடுகள், அரசு நடவடிக்கைகளுக்கான டேட்டா மற்றும் அழைப்பு மையங்கள் மற்றும் ஆன்லைன் கற்பித்தல் மற்றும் தொலைதூரக் கற்றல் ஆகிய அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று அரசு தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்