கொரோனா வைரஸ்: முகக் கவசங்களை தயாரிக்கிறது ஆப்பிள்! 

கொரோனா வைரஸ்: முகக் கவசங்களை தயாரிக்கிறது ஆப்பிள்! 

ஆப்பிள் தற்போது அமெரிக்காவிற்கு வெளியே முகக்கவசங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள போதிலும், அமெரிக்காவிற்கான மருத்துவ கருவிகளில் வேலை செய்கிறது

ஹைலைட்ஸ்
  • சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக ஆப்பிள் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது
  • டிம் குக் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒரு வீடியோவில் வெளிப்படுத்தினார்
  • ஆப்பிள் சமீபத்தில், கோவிட்-19 செயலி & அமெரிக்க வலைத்தளத்தை வெளியிட்டது
விளம்பரம்

ஆப்பிள், அமெரிக்க சுகாதார ஊழியர்களுக்கான முக கவசங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. குபெர்டினோ நிறுவனம், வாரத்திற்கு ஒரு மில்லியன் முகக் கவசங்களை தயாரிக்க உள்ளது. அமெரிக்கா தவிர, மற்ற நாடுகளிலிலும் முக கவசங்களை தயாரிக்கும் திட்டங்கள் உள்ளன என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் மாத இறுதியில், Apple தனது COVID-19 ஸ்கிரீனிங் செயலி மற்றும் வலைத்தளத்தை அமெரிக்காவில் வெளியிட்டது. தொற்றுநோயிலிருந்து மீள உதவுவதற்காக நிறுவனம் தனது சீனா நன்கொடைகளை இரட்டிப்பாக்கியது.

ஆப்பிள் தயாரித்த முகக் கவசங்கள் கடந்த வாரம் கைசர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது என்றும், உற்பத்தி செயல்முறை மற்றும் கவசங்களுக்கான பொருட்கள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன என்றும் குக் குறிப்பிட்டுள்ளார். 

"இந்த வார இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பிறகு வாரத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவை அனுப்பப்டும்" என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு முகக் கவசமும் முழுமையாக செய்து முடிக்க இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்றும் குக் கூறினார். 

டிம் குக் பேசிய வீடியோ ட்வீட்டை கீழே காணலாம். 

"முகக் கவசங்கள் மிக அவசரமாக தேவைப்படும் இடத்திற்கு கொண்டுசெல்ல, அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம் என்று குக் கூறினார்".

ஆப்பிளைத் தவிர, அமெரிக்காவில் உள்ள பல்வேறு மின்னணு நிறுவனங்களும் கார் தயாரிப்பாளர்களும் வென்டிலேட்டர்கள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் கவசங்கள் மற்றும் ஹஸ்மத் உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளுக்கான சுகாதார உபகரணங்களுக்கான உற்பத்தியை மாற்றி வருகின்றனர்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, Tim Cook, coronavirus, COVID 19
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »