அலெக்ஸாவிடம், கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வியை கேட்பதன் மூலம் voice assistant உங்களுக்கு பதிலலிக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பயனர்களுக்கு உதவக்கூடிய அம்சங்களை அமேசான் பட்டியலிட்டுள்ளது.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய Amazon Alexa உங்களுக்கு உதவுகிறது. அமேசான், வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்கான செயல்பாட்டை அலெக்சாவுக்கு வழங்கியுள்ளது. அமேசான் அலெக்சா மூலம், காலிங், மியூசிக் போன்றவற்றை அனுபவித்திருப்போம். தற்போது, நோய் தொற்றின் அறிகுறிகள், நீங்கள் வெளியூர் சென்றுவந்திருந்தால் அவற்றின் பயண வரலாறு மற்றும் வைரஸ் தொற்று பற்றிய முழு தகவல்களையும் அலெக்சாவை பயன்படுத்தி கேட்டறியலாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மக்களுக்கு உதவும் வகையில் அமேசான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த அம்சம் இப்போது அமெரிக்க பயனர்களுக்கு கிடைக்கிறது. நீங்கள், அலெக்ஸாவிடம், coronavirus அல்லது COVID-19 இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வியை கேட்பதன் மூலம் voice assistant உங்களுக்கு பதிலளிக்கும். அதன் பிறகு, அது CDC-யின் வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குகிறது.
ஜப்பானிலும், அலெக்சாவைப் பயன்படுத்தி, பாதிப்பு அளவைப் பற்றி கேட்டறியலாம். அதற்கு, அலெக்சா, பாதிப்பு நிலை மற்றும் அறிகுறிகளுடன் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வழங்கும். இந்த பதில்கள் அனைத்தும், ஜப்பானிய சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின் பேரில் வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள அமேசான் அலெக்சா பயனர்கள் அலெக்சாவிடம் 20 விநாடிகள் ஒரு பாடலைப் பாடச் சொல்லலாம், அந்த நேரத்தில் அவர்கள் கைகளைக் கழுவுவிடுவார்கள். இதனால், இந்த அம்சம் குழந்தைகளை சரியாக கைகளை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அமேசான் அலெக்சா போலவே, Apple's Siri voice assistant-ம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆலோசனையை வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து, கூகுளும் கை கழுவும் நேரத்தையும் சேர்த்துள்ளதாக சிஎன்இடி தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India
A Knight of the Seven Kingdoms OTT Release: Know When and Where to Watch This Prequel of Game of Thrones