Photo Credit: Nothing
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Nothing Phone 3a செல்போன்கள் பற்றி தான்
Nothing Phone 3a செல்போன் மார்ச் 4 வெளியீட்டு நிகழ்வின் போது வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது. இது 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஆன்லைனில் நத்திங் போன் 3ஏ மாடலின் அம்சங்கள் கசிந்துள்ளது.ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் அறிக்கையின்படி , Nothing Phone 3a மற்றும் Nothing Phone 3a Pro ஆகியவை மார்ச் 4ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 8GB ரேம்+128GB மெமரி மற்றும் 12GB ரேம்+256GB மெமரி என இரண்டு மாடல்களில் வருகிறது. இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வழங்கப்படலாம். இதற்கிடையில் Nothing Phone 3a Pro செல்போன் 12ஜிபி ரேம்+256ஜிபி மெமரி என ஒரே மாடல் மட்டும் உள்ளது. இது சாம்பல் வண்ணத்தில் வந்துள்ளது. நத்திங்கின் வரவிருக்கும் வெளியீட்டு நிகழ்வில் "பவர் இன் பெர்ஸ்பெக்டிவ்" என்ற டேக்லைன் உள்ளது. பின்புறத்தில் செங்குத்தாக அடுக்கப்பட்ட இரண்டு கேமரா வளையங்களைச் சுற்றி டிசைன் அமைந்துள்ளது.
Nothing Phone 3a செல்போன் 6.8-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 சிப்செட்டுடன் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி கோடனுள்ளது. இந்த போன் A059 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது.
45W சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியைப் பெற வாய்ப்புள்ளது. இது NFC இணைப்பையும் சப்போர்ட் செய்யும். Nothing OS 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த நத்திங் போன் 3ஏ போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதி இந்த போனில் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்