அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2 பயனர்கள், இனி ஆண்ட்ராய்டு பைய் அப்டேட்டைப் பெற முடியும். அசுஸ் நிறுவனம் சமீபத்தில்தான் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M2 மற்றும் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1 வரிசை போன்களுக்கு ஆண்ட்ராய்டு பைய் அப்டேட்டை விட்டது. இந்நிலையில் மேக்ஸ் ப்ரோ M2-க்கும் அந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. பலகட்ட தாமதங்களுக்குப் பின்னர் அசுஸ் நிறுவனத்தின் இந்த மூன்று போன்களும் அப்டேட் பெறுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அசுஸ், ‘ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பைய் அப்டேட் ரிலீஸ் செய்யப்படும்' என்று கூறியிருந்தது.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2, ஆண்ட்ராய்டு பைய் அப்டேட் ஆனது, 16.2017.1903.061 ஃபர்ம்வேருடன் வருகிறது. இந்த கலக்கல் அப்டேட் தானாக வரவில்லை என்றால், பயனர்கள் அமைப்புகளில் போய் அதை மேனுவலாக தரவிறக்கம் செய்ய வேண்டும்.
பைய் அப்டேட்டை உங்கள் அசுஸ் போன்களுக்குப் பெறுவதற்கு முன்னர், மொபைல் முழு சார்ஜில் இருக்கும்படியும், நல்ல வை-ஃபை இணைப்பில் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வதை நாங்கள் சிபாரிசு செய்வோம். அனைத்தையும் சரியாக செய்த பின்னரும் பைய் அப்டேட்-ஐ பெற முடியவில்லை என்றால், போனில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். அதை அசுஸ் நிறுவனம்தான் தீர்த்து வைக்க வேண்டும். இந்த புதிய அப்டேட் குறித்து செக் செய்ய உங்கள் போனில், Settings > System > System Updates என்பதை சொடுக்கவும்.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2 போன்களைப் பொறுத்தவரை, கடந்த பிப்ரவரி மாதம் முதலே, பைய் அப்டேட் பகுதி வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. பின்னர்தான் அசுஸ் நிறுவனம், இதர போன்களுக்கும் இந்த அப்டேட் வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தது.
சமீபத்தில் அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2 போன் விலை குறைக்கப்பட்டது. அதையடுத்து 3ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த போன் 9,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M2-வின் 4ஜிபி + 64ஜிபி வகை 11,999 ரூபாய்க்கும், 6ஜிபி + 64ஜிபி வகை 13,999 ரூபாய்க்கும் சந்தையில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்