Xiaomi-யின் Redmi Note 8 Pro சமீபத்தில் ஒரு புதிய Deep Sea Blue வண்ணத்தைப் பெற்றது. பின்னர் இது போனின் Electric Blue கலர் ஆப்ஷனாக இந்தியா சந்தைக்கு வந்தது. இப்போது, ஜியோமி சீனாவில் Redmi Note 8 Pro-வுக்கு ஒரு புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Twilight Orange என்று அழைக்கப்படுகிறது. Redmi Note 8 Pro-வின் Twilight Orange வண்ணத் திட்டம் மேல் பகுதியில் carrot pink shade உடன் gradient finish உள்ளது.
Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டுகள் மட்டுமே Twilight Orange கலர் ஆப்ஷனில் கிடைக்கின்றன. Redmi Note 8 Pro-ன் Twilight Orange வேரியண்ட் சீனாவில் ஜனவரி 9 (நாளை) முதல் விற்பனைக்கு வரும். Redmi Note 8 Pro-வுக்கான புதிய பெயிண்ட்ஜோப் ஈர்க்கக்கூடியதாகத் தோன்றுகிறது. ஆனால், Twilight Orange பதிப்பு இந்திய சந்தைக்கு வருமா என்பதில் எந்த வார்த்தையும் இல்லை. Redmi Note 8 Pro தற்போது இந்தியாவில் Electric Blue, Gamma Green, Halo White மற்றும் Shadow Black கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,999-யில் இருந்து தொடங்குகிறது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro, 19.5:9 aspect ratio மற்றும் waterdrop notch உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது. அதே சமயம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 64-megapixel main snapper, 8-megapixel ultra-wide-angle shooter, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens ஆகியவை அடங்கும். முன்புறத்தில், வீடியோ கால் மற்றும் செல்ஃபிகளுக்கு f/2.0 lens உடன் 20-megapixel கேமரா உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்