Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டுகள் மட்டுமே Twilight Orange கலர் ஆப்ஷனில் கிடைக்கின்றன.
Redmi Note 8 Pro-வின் Twilight Orange பதிப்பு இந்திய சந்தைக்கு வருமா என்பதில் எந்த வார்த்தையும் இல்லை
Xiaomi-யின் Redmi Note 8 Pro சமீபத்தில் ஒரு புதிய Deep Sea Blue வண்ணத்தைப் பெற்றது. பின்னர் இது போனின் Electric Blue கலர் ஆப்ஷனாக இந்தியா சந்தைக்கு வந்தது. இப்போது, ஜியோமி சீனாவில் Redmi Note 8 Pro-வுக்கு ஒரு புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Twilight Orange என்று அழைக்கப்படுகிறது. Redmi Note 8 Pro-வின் Twilight Orange வண்ணத் திட்டம் மேல் பகுதியில் carrot pink shade உடன் gradient finish உள்ளது.
![]()
Redmi Note 8 Pro-வின் Twilight Orange வேரியண்ட் சீனாவில் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது
Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டுகள் மட்டுமே Twilight Orange கலர் ஆப்ஷனில் கிடைக்கின்றன. Redmi Note 8 Pro-ன் Twilight Orange வேரியண்ட் சீனாவில் ஜனவரி 9 (நாளை) முதல் விற்பனைக்கு வரும். Redmi Note 8 Pro-வுக்கான புதிய பெயிண்ட்ஜோப் ஈர்க்கக்கூடியதாகத் தோன்றுகிறது. ஆனால், Twilight Orange பதிப்பு இந்திய சந்தைக்கு வருமா என்பதில் எந்த வார்த்தையும் இல்லை. Redmi Note 8 Pro தற்போது இந்தியாவில் Electric Blue, Gamma Green, Halo White மற்றும் Shadow Black கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,999-யில் இருந்து தொடங்குகிறது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro, 19.5:9 aspect ratio மற்றும் waterdrop notch உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது. அதே சமயம் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. போனின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், 64-megapixel main snapper, 8-megapixel ultra-wide-angle shooter, 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens ஆகியவை அடங்கும். முன்புறத்தில், வீடியோ கால் மற்றும் செல்ஃபிகளுக்கு f/2.0 lens உடன் 20-megapixel கேமரா உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket