சியோமி தனது ஸ்மார்ட்போன்களின் முன்புற கேமராவை திரையின் கீழ் மறைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'.
சியோமியின் 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'.
மொபைல்போன்களில் நாளுக்கு நாள் ஒரு புதுப்புது மேம்பாடு. குறிப்பாக கேமராக்கள், அவற்றின் வளர்ச்சியென்பது மிகவும் அபரிவிதம். முன்பெல்லாம், கேமரா போன்களை பார்ப்பதே அதிசயம். ஆனால், தற்போது அவற்றை எளிதில் நம் பைகளில் சுமக்கிறோம். அதுவும், இந்த சில ஆண்டுகளில் கேமராக்களின் வளர்ச்சி உச்சத்தில் உள்ளது. ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்த கேமராக்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மக்களால் நிராகரிக்கப்படலாம். இந்த கேமராக்களின் மேம்பாடு என்பது 1 மெகாபிக்சல் கேமராவில் துவங்கி 60 மெகாபிக்சலை தொட்டுள்ளது.
புகைப்படங்களின் அடுத்த பரினாமம் தான் செல்பிக்கள். இவற்றை எடுக்கப் பயன்படும் செல்பி கேமராக்கள், முதலில் முன்புறத்தின் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்திருந்தது. பின், மேம்பாட்டின் பயணத்தில் இந்த செல்பி கேமரா புதுப்புது தொழில்நுட்பங்களை சந்தித்தது. நாட்ச் டிஸ்ப்லே, ஹோல்-பன்ச் டிஸ்ப்லே என தொடர்ந்த இந்த பயணம், தற்போது 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' என்ற இடத்தில் வந்து நிற்கிறது. இந்த தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் கடந்த வாரம் ட்விட்டரில் அறிமுகப்படுத்தியது. ஓப்போ நிறுவனமும் இந்த தொழில்நுட்பம் குறித்த வீடியோவை வெளியிட்டு, பந்தையத்தில் தன்னை ஒரு போட்டியாளராக முன்னிருத்திக்கொண்டது. ஆனால், தற்போது, சியோமி நிறுவனம் ஒருபடி மேலே சென்று இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்ற விளக்கத்தை ஒரு போட்டோ தொடரின் மூலம் விளக்கி, பார்வையாளர்கள் கவனத்தை தன்வசம் ஈர்த்துள்ளது.
முன்னதாக சியோமி நிறுவனம் கடந்த வாரம், இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' பற்றிய தகவலையும், அதன் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் ட்விட்டர் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதென்ன 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'? இந்த கேமரா ஸ்மார்ட்போனின் முன்புறம் தான் இருக்குமா? கண்ணுக்கே தெரியாமல், டிஸ்ப்லேயின் கீழ் மறைந்திருக்கும் இந்த கேமரா எப்படி செயல்படுகிறது? எப்படி படங்களை எடுக்கிறது?
உங்கள் சந்தேகம் அனைத்திற்கும் சியோமி தந்திருக்கும் விளக்கம் இதோ!
ஸ்லைடர் அல்லது பாப்-அப் கேமரா பொன்ற அம்சங்கள் இல்லாமல், ஒரு முழு நீளத்திரையை அறிமுகப்படுத்தும் முயற்சியிலேயே சியோமி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்போன்களின் முன்புற கேமராவை திரையின் கீழ் மறைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா'. திரையின் கீழ் இந்த கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஒருவேளை, நீங்கள் செல்பி எடுக்க உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை திறந்தால், இந்த கேமராவின் மேலுள்ள திரை ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட திரையாக மாறிவிடும். பின் முன்புற கெமராவில் எளிதாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
சரி, கேமராவினுள் நுழையும்போது மட்டும் எப்படி அந்த திரை ஒளி ஊடுருவும் தன்மையை பெருகிறது?
சாதரனமாக ஒரு ஸ்மார்ட்போனின் திரை என்பது எதிர்மின் வாய் (Cathode), ஒளிரும் பொருள் (Organic Luminiscent Material), நேர்மின் வாய் (Anode) என மூன்று அடுக்குகளை கொண்டிருக்கும். சாதாரனமான திரையில் இந்த எதிர்மின் வாய் மற்றும் நேர்மின் வாயை கடந்து ஓளி உட்புகாது. இந்த திரையின் அடுக்கில் ஒரு பகுதியான ஒளிரும் திரை ஒளியை வெளிப்படுத்தும். இது சாதாரன திரையின் அமைப்பு. ஆனால் 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' பொருத்தப்பட்டுள்ள திரையின் அடுக்குகளில் உள்ள எதிர்மின் வாய் மற்றும் நேர்மின் வாய் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். இதன் மூலம், கேமராக்களுக்குள் செல்லும்போது, ஒளி உள்ளே செல்லும், புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். மற்ற நேரங்களில் சாதாரன திரை போல இந்த திரை செயல்படும்.
திரைக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கேமராவின் செயல்பாடு எப்படி இருக்கும்?
20 மெகாபிக்சல் முன்புற கேமராவை மறைத்து வைத்துள்ள இந்த திரை, திரை உட்பொதிக்கப்பட்ட கேமரா (Display-Embeded Camera)-வாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திரை கேமராவின் லென்ஸ் போலவே செயல்படும். இந்த அமைப்பு அதிக ஒளி உள்ளே செல்ல உதவும். இதன் விளைவு, மற்ற விதமான கேமராக்களை விட தரமான புகைப்படங்கள். மேலும் திரையை அனைத்தாலும், கேமரா வெளியே தெரியாமல், ஒரு கருப்பு நிற திரையில் தோற்றத்தையே அளிக்கும்.
சியோமி நிறுவனம் இந்த விளக்கத்துடன் இணைந்து, 'டாட்-கேமரா' திரையும் 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' திரையும் எப்படி தோற்றமளிக்கும் என ஒரு ஒப்பீடையும் காண்பித்துள்ளது.
முழு நீள திரை + முன்புற கேமரா, இந்த காம்போவை உறுதி செய்ய 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama