Photo Credit: SlashLeaks
தற்போது தகவல் வெளியாகும் மைதானத்தில் சிறப்பு இடங்களை பிடித்திருப்பது ரெட்மி 8-தொடர் ஸ்மார்ட்போன்கள்தான். ரெட்மி 8-தொடர் ஸ்மார்ட்பொன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணமே உள்ளது. அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் 'ரெட்மி 8A' ஸ்மார்ட்போன் இணைந்துள்ளது. சிவப்பு நிற வண்ணத்திலான இந்த 'ரெட்மி 8A' ஸ்மார்ட்போனின் முன்புற மற்றும் பின்புற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 2 பின்புற கேமராக்கள், பின்புற பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது என்பதை இந்த புகைப்படங்கள் காண்பிக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான் தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான பேட்டரி, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம்.
சமீபத்தில் வெளியான இந்த 'ரெட்மி 8A' ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என்பதை காண்பிக்கிறது. மேலும் பின்புறத்தில், பிங்கர் பிரின்ட் சென்சார் இடம்பெற்றுள்ளதையும் காண்பிக்கிறது. இந்த புகைப்படங்களின் மூலம், 'ரெட்மி 8A' ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.0GHz வேகத்துடன் ஸ்னேப்ட்ராகன் 439 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு கொண்ட வகையில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை அமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh அளவிலான மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
TENAA டேட்டாபேஸின் தகவலின்படி, இந்த 'ரெட்மி 8A' ஸ்மார்ட்போன் 6.217-இன்ச் HD+ (720x1520 பிக்சல்கள்) திரை, 19:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2GB + 16GB, 3GB + 32GB, மற்றும் 4GB + 64GB என மூன்று வகைகளில் அறிமுகமாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 156.3x75.4x9.4mm அளவுகளுடன், 190 கிராம் எடை கொண்டு இந்த ரெட்மி 8A ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்