இது தற்போதைக்கு திட்ட வடிவமாக இருக்கிறது
சியோமி தனது அடுத்த தயாரிப்பான எம்ஐ 9 ஸ்மார்ட் போனின் இறுதிகட்ட வேலைகளில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொது வெளியாகியுள்ள தகவல்படி அந்நிறுவனம் மற்றொரு மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
அதன்படி சியோமி நான்கு பக்கமும் போன் வளையும்படியான புதிய டிசைன் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 'முழு ஸ்கிரீன்' டெக்னாலஜியை எற்கெனவே தென்கொரிய நிறுவனமான சாம்சங் அதன் போன்களில் பொருத்தி வருவதாக கூறப்பட்டது. சாம்சங் தொழில்நுட்பத்தில், வலது மற்றும் இடது புறத்தில் மட்டுமே வளைவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது சியோமி பெற்றுள்ள புதிய டிசைன்களில் மேலும் கீழும் போன் வளையும்படியும், பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற போன் டிசைன்கள் ஏற்கெனவே வெளியான எம்ஐ மிக்ஸ் 3 மற்றும் எம்ஐ மிக்ஸ் 2 எஸ் போன்ற போன்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. முழுமையாக திரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் டிசைனில் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் இடம் பெறவில்லை.
மெய்ஜூ ஜிரோ மற்றும் விவோ அபேக்ஸ் 2019 போன்ற புதிய ஸ்மார்ட் போன்களில் எவ்வித தொடும் வசதி பட்டன்கள் இல்லாத வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்த புதிய டிசைன் அறிமுகம் மூலம் சியோமி நிறுவனம் களப் போட்டியில் இணைந்துள்ளது.
இந்த டிசைனை சியோமி நிறுவனம் வெளியிடுமா போன்ற தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனத்தின் கவனம் முழுவதும் தற்போது வெளியாகவுள்ள எம்ஐ 9 (ரூபாய் 31,600) உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்