Photo Credit: Mi.com
சியோமி எம்ஐ நோட்புக் ஏரில் புதிய வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐ5 ப்ராசஸருடன் 12.5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது 12.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட நோட்புக் ஏர் இன்டல் கோர் M3 பிராசஸர் வேரியண்டை போல் உள்ளது.
ஆனால் இதில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது போல் உள்ளது. இந்த நோட்புக்கை பெற அதன் பிரத்தியோக தளத்தில் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது மேலும், Jd.com தளத்திலும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
பிராஸசரை தவிர்த்து இந்த எம்.ஐ நோட்புக் ஏரில் 12.5 இன்ச் பேனலைக் கொண்டுள்ளது. 4ஜிபி ரேம், 4ஜி இணைப்பு வசதி, மற்றும் 256ஜிபி நினைவகம் கொண்டுள்ளது.
இன்டெல் கோர் i5 வேரியண்ட் வகைகளுக்கான முன்பதிவு சீனாவில் தொடங்கியுள்ளது. இதன் விலையானது CNY 3,999 (தோராயமாக Rs. 40,500) ஆகும். தற்போது எம்.ஐ மற்றும் ஜெ.டி தளங்களில் மட்டும் இந்த நோட்புக் ஏர் கிடைக்கும் என தெரிகிறது.
இந்த வளைதளங்களில் வாடிக்கையாளர்கள் CNY 100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இன்டெல் கோர் M3 பிராஸசர் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது.
சியோமியின் புதிய எம்ஐ நோட்புக் ஏர் விண்டோஸ் 10ல் இயங்கும். 12.5 இன்ச் புல் எச்.டி டிஸ்பிளே (920x1080 பிக்ஸெல்ஸ்) உடன் 170 டிகிரி வைட் வியூவிங் ஆங்கிள் கொண்டுள்ளது. 7ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5- 7Y54 பிராஸசர், இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 615, 4ஜிபி ரேம், 256ஜிபி எஸ்எஸ்டி, நினைவகம் கொண்டுள்ளது.
இதில் 1 மெகா பிக்ஸெல் வெப் கேமரா உடன் 720p வீடியோ கால்ஸ் கொண்டுள்ளது. சியோமி எம்.ஐ நோட்புக் ஏர் 12.5 இன்ச் நோட்புக் ஏர்ரானது 1சி பாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளது. இதில் 8மணி நேரம் ஆன்லைன் வீடியோ பிளேபேக், 7.5 மணி நேரம் வீடியோ பிளே பேக் 7.5 மணி நேரம் பிரவுசிங் செய்யலாம். இதன் இடை 1.07 கிலோ ஆகும். யூஎஸ்பி டைப் சி சார்ஜிங், கீபோர்டில் பேக்லைட் வசதியும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்