எம்.ஐ டிவி 4 ஏ மற்றும் எம்.ஐ டிவி 4 சி புரோ தொலைக்காட்சிகளின் விலை திடீரென சரிந்தது. சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவல் படி 32 இன்ஞ் டிவிகளுக்கு ஜிஎஸ்டி-யின் வரி விகிதம் 28%- ல் இருந்து 18% குறைந்ததாலேயே இந்த விலைச்சரிவு என தங்களது கருத்தை தெரிவித்தனர்.
மேலும் இந்த விலைக்குறைப்பால் 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எம்.ஐ டிவி 4 ஏ 1,500 ரூபாய் விலை குறைந்து 12,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதைப்போல் 15,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ டிவி 4 சி புரோ 2,000 ரூபாய் விலை குறைந்து 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் எம்.ஐ. எல்.இ.டி டிவி 4 ஏ புரோ 49 மாடல் 1,000 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த மாதம் ரெட்மீ போன்களுடன் இந்த வகை டிவிகளின் விலைகளும் ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலை சரிவுக்கு ஜிஎஸ்டியின் மாற்றமே காரணம் என கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமையன்று சியோமி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் 31,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம்.ஐ. டிவி 4ஏ புரோ 49, 1000 ரூபாய் குறைந்து 30,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவு எம்.ஐ யின் வாடிக்கையாளர்களை மிகவும் குஷியாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்