Photo Credit: Weibo / Lei Jun
முன்னதாக சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்களான Mi CC9 மற்றும் Mi CC9e ஆகிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் வருகின்ற ஜூலை 2 அன்று அறிமுகப்படுத்தப் போவதாக சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. இளைஞர்களை மையப்படுத்தி தயாரித்து அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல் ஒன்றை வெளியிட்ட வண்ணம் உள்ளது சியோமி நிறுவனம். அதன் வரிசையில், இன்று அட்டகாசமான பார்வையுடன் நீல நிற வண்ணம் கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகவுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன், பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
சியோமியின் துணை நிறுவனர், தனது வெய்போ பக்கத்தில், நீல (Dark Blue Planet) நிறம் இந்த Mi CC9 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போனில் அழகான கிரெடியன்ட் தோற்றத்துடன், மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த நீல நிற கிரெடியன்ட் தோற்றம் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இந்த ஸ்மார்ட்போனுடன் இணைந்து Mi CC9e ஸ்மார்ட்போன், என இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் ஜூலை 2 அன்று அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து முன்னதாக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா கொண்டுள்ளது என்ற தகவலை சியோமி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
முன்னதாக, தனது ட்விட்டர் கணக்கில் தொழில்நுட்ப வல்லுனரான முகில் சர்மா (Mukul Sharma) வெளியிட்டிருந்த தகவலின்படி, Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 4000mAh பேட்டரி, 27W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகளும் 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 3,099 யுவான்கள் (31,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது போன்ற தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்