Mi CC9, Mi CC9e, Mi CC9 மெய்ட்டு சிறப்புப் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 3 ஜூலை 2019 11:04 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போன்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது
  • இதனுடன், 4030mAh பேட்டரி அளவு, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • Mi CC9 1,799 யுவான்கள் (18,000 ரூபாய்) என்ற விலையில் துவங்குகிறது

சீனாவில் அறிமுகமான Mi CC9 ஸ்மார்ட்போன்கள்

சியோமி நிறுவனம் நேற்று தனது Mi CC9, Mi CC9e ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பின்புறத்தில் மூன்று கேமராக்களையும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் ஸ்டைல் நாட்சையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன்கள் 4,030mAh பேட்டரி அளவு, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

மேலும், Mi CC9, Mi CC9e என இரு ஸ்மார்ட்போன்களுடன் Mi CC9 மெய்ட்டு சிறப்புப் பதிப்பு ஸ்மார்ட்போன் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்திலும் Mi CC9 ஸ்மார்ட்போன்களின் அம்சங்களையே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், RAM, சேமிப்பு அளவு மற்றும் வண்ணங்களில் மட்டும் சில வேறுபாடுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை விலை, முழு சிறப்பம்ச விவரங்கள் உள்ளே!

Mi CC9, Mi CC9e, Mi CC9 மெய்ட்டு சிறப்புப் பதிப்பு: விலை!

6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகள் கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போன் 1,799  யுவான்கள் (18,000 ரூபாய்) மற்றும் 1,999 யுவான்கள் (20,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ பிலேனட் (Blue Planet), டார்க் பிரின்ஸ் (Dark Prince), மற்றும் வைய்ட் லவ்வர் (White Lover) என மூன்று வண்ணங்கள் கொண்டுள்ளது.

மறுபுறத்தில், Mi CC9e ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு,  6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு மற்றும்  6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற இந்த மூன்று வகைகள் 1,299 யுவான்கள் (13,000 ரூபாய்), 1,399 யுவான்கள் (14,000 ரூபாய்) மற்றும் 1,599 யுவான்கள் (16,000 ரூபாய்) என்ற விலைகளை கொண்டுள்ளது. Mi CC9 ஸ்மார்ட்போன் போலவே, இந்த ஸ்மார்ட்போனும் ப்ளூ பிலேனட் (Blue Planet), டார்க் பிரின்ஸ் (Dark Prince), மற்றும் வைய்ட் லவ்வர் (White Lover) என மூன்று வண்ணங்கள் கொண்டுள்ளது.

Mi CC9 மெய்ட்டு சிறப்புப் பதிப்பு ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்டு ஒரு வகையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2,599 யுவான்கள் (26,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் பதிப்பு வெள்ளை (White gradient) நிறத்தில் மட்டும் அறிமுகமாகியுள்ளது.

இவற்றில் Mi CC9 மற்றும் Mi CC9 மெய்ட்டு சிறப்புப் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் ஜூலை 5 அன்று சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதே நேரம், இந்த ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமான Mi CC9e ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 9 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.

சியோமி Mi CC9 மெய்ட்டு சிறப்புப் பதிப்பு

Advertisement

Mi CC9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!

Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 403ppi பிக்சல் அடர்த்தி, 430 நிட்ஸ் ஓளிர்வு திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 2.2GHz ஆக்டா-கோர் ஸ்னெப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், கேம் டர்போ 2.0 மோட், டை-C சார்ஜிங் போர்டுடன் 4,030mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்ற சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 179 கிராம் எடையுடன் 156.8x74.5x8.67mm என்ற அளவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

சியோமி Mi CC9e

Advertisement

Mi CC9e ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

Mi CC9e ஸ்மார்ட்போன் 6.08-இன்ச் FHD+ திரை (720x1560 பிக்சல்கள்), 350 நிட்ஸ் ஓளிர்வு திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், 2.0GHz ஆக்டா-கோர் ஸ்னெப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. Mi CC9 ஸ்மார்ட்போன் போலவே இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 4,030mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்ற சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 173.8 கிராம் எடையுடன் 153.48x71.85x8.4mm என்ற அளவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

Advertisement
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4030mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  2. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  3. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  4. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  5. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  6. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  7. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  8. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  9. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  10. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.