'Mi A3' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக தயார் நிலையில் உள்ளது. அண்ட்ராய்ட் ஒன் அமைப்புடன் 3 பின்புற கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, குவால்காம் ஆக்டா-கோர் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி பிராசஸர், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் என பல அட்டகாசமான சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, சியோமி நிறுவனம் 'Mi A3' ஸ்மார்ட்போன் பற்றிய டீசர்களை வெளியிட்ட வண்ணம் இருந்தது. முன்னதாக கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன், ஸ்பெய்னில் அறிமுகமானது. சியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய டீசர்களை வெளியிட்ட அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை பற்றிய வதந்திகளும் வெளியாகிய வண்ணமே இருந்தது.
'Mi A3' ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது என்பதை சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த அறிமுக நிகழ்வின் நேரலையை Mi தளங்களின் பக்கங்களில் காணலாம்.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகவுள்ளது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'Mi A3' ஸ்மார்ட்போன் 17,499 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம்.
சியோமி இந்தியாவில் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் வெளியிட்ட டீசரின்படி, இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Not Just Blue), வெள்ளை (More Than White), மற்றும் சாம்பல் (Kind of Grey) என மூன்று வண்ணத்தில் அறிமுகமாகலாம்.
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் Mi தளங்களில் விற்பனைக்கு இடம்பெறலாம்.
ஆனால், இந்த விலைகள் கடந்த மாதம் ஸ்பெய்னில் வெளியான 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலையிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளது. ஸ்பெய்னில் இந்த ஸ்மார்ட்போனின் 64GB வகை 249 யூரோக்கள் (சுமார் 19,800 ரூபாய்), மற்றும் 128GB வகை 279 யூரோக்கள் (சுமார் 22,100 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமானது.
இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720x1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்