இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 3 பின்புற கேமராக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: GSMArena
இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களுடன் Mi A-தொடரின் அடுத்த ஸ்மார்ட்போனான 'Mi A3' அறிமுகமாகவுள்ளதாக சியோமி நிறுவனம் டீசர்களை வெளியிட்டிருந்தது. இன்னிலை, இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 17-ல் ஒரு நிகழ்வின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக அதிர்காரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான அறிமுகத்திற்கு முன்னரே, 'Mi A3' ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அப்படி வெளியான தகவலை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர், 3 பின்புற கேமராக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களுடன் Mi A-தொடரின் அடுத்த ஸ்மார்ட்போன் 'Mi A3' குறித்த டீசர்களை சியோமி நிறுவனம் வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. 'Mi A3' ஸ்மார்ட்போனும் 'Mi A3 லைட்' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னிலையில் இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, இந்த 'Mi A3' ஸ்மார்ட்போன் ஜூலை 17-ல் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் 'Mi A3 லைட்' ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி ஸ்பெய்ன் நிறுவனம், தனது டிவிட்டர் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஜூலை 17-ல் 'Mi A3' ஸ்மார்ட்போன் ஸ்பெய்னில் அறிமுகமாகவுள்ளது. அதே நேரம் சியோமி போலாந்து நிறுவனம் ஜூலை 25-ல் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என கூறியிருந்தது. போலாந்தில் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 25-ல் அறிமுகமாகலாம்.
ஆனால் இந்த அறிவிப்புகளுக்கு முன்னதாகவே, 'Mi A3' ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியன. GSMArena என்ற தளத்தில்தான் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
![]()
அந்த புகைப்படங்களை வைத்துப்பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சாருடன் 6.088-இன்ச் என்ற அளவிலான திரை கொண்டுள்ளது. 4,030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. இந்த அம்சங்களை கொண்டு 'Mi A3' ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed