Photo Credit: AliExpress
ஜியோமி எம்ஐ ஏ2 லைட் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே மற்றுமொரு தளத்தின் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த மாற்றங்கள் எம்ஐ ஏ2 அதிகாரப்பூர்வமாக, அதன் மலிவான வெர்ஷனுடன் இணைந்து ஸ்பெய்னில் ஜூலை 24 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற சூழலில் நடைபெறுகிறது. இதன் லைட் வெர்ஷன் இரண்டு வகைகளில் சைனாவின் அலிஎக்ஸ்ப்ரஸ் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதில் ஒன்று 3 ஜீபி ரேம் மற்றும் 32 ஜீபி ஸ்டோரேஜ் உடன் $189.99 விலையிலும் (தோராயமாக ரூ. 13,000 ஆகவும்), மற்றொன்று 4 ஜீபி ரேம் மற்றும் 64 ஜீபி ஸ்டோரேஜ் உடன் $. 209.99 விலையில் (தோராயமாக ரூ. 14,400) இருக்கின்றன. இதே மாடல் கடந்த வாரம் போலாந்தில் தோராயமாக ரூ. 18,600 என இருந்தது. எனவே எம்ஐ ஏ2வின் அதிகாரப்பூர்வ விலை யூகிக்கப்படுவதை விட குறைவாக இருக்கும் என தெரிகிறது.
அலிஎக்ஸ்ப்ரஸ் இணையதளம், ஜியோமி எம்ஐ ஏ2 லைட் விலையுடன் சேர்த்து குறிப்பிட்ட சில ஸ்பெசிஃபிகேஷன்களையும் குறிப்பிட்டுள்ளது. இந்த மாடல் முதன்மையாக சீனா மற்றும் சிங்கப்பூரில் மாடல் எண் எம்1805டீஐ உடன் சான்று பெற்றுள்ளது. இதில் டுயல் சிம் (நேனோ), கூகுளின் ஆண்ட்ராய்ட் ஒன் திட்டத்தின் அடிப்படையில் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ, 5.84 இன்ச் முழு ஹச்டி, 19:9 ஆஸ்பக்ட் ரேஷியோவில் 1080*2280 பிக்ஸல்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை கொண்டுள்ளது. இதில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி ப்ராசஸர், 4 ஜீபி ரேம் மற்றும் 64 ஜீபி இண்டர்னல் ஸ்டோரேஜ், மெமரி கார்டின் மூலம் 256 ஜீபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் டுயல் ரியர் கேமரா ஒன்று 12 மெகா பிக்ஸல் பிரைமரி சென்சாருடன், மற்றொன்று 5 மெகாபிக்ஸல் செகண்டரி சென்சாருடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியில் ஏஐ போட்ரைட் மோட் மற்றும் ஏஐ ப்யூட்டி மோட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. மேலும் முன்பக்க கேமரா 5 மெகாபிக்ஸல் சென்சார் உடன் ஸ்மார்ட் ப்யூட்டி அம்சம் கொண்டுள்ளது.
மேலும் எம்ஐ ஏ2 லைட் கோல்ட், பிளாக் மற்றும் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் இருந்து வருகிறது. ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள இதன் டிசைனில் ரெட்மி 6 ப்ரோ மற்றும் எம்ஐ 8 ஆகியவற்றைப் போல நாட்ச் வடிவம் இருக்கிறது. அதேபோல் பின்புறம் கைரேகை சென்சார் ஒன்று இருக்கிறது.
எனினும் அலிஎக்ஸ்ப்ரஸ் தளத்தில் எம்ஐ ஏ2 லைட் பற்றிய தகவல்கள் இருந்தாலும், கடந்த ஆண்டு வெளிவந்த எம்ஐ ஏ1 மாடலின் தொடர் வெளியீடான எம்ஐ ஏ2 பற்றி எந்த தகவல்களும் இல்லை. ஆனால் இரண்டு மாடல்களுக்கும் ஜூலை 24 அன்று ஸ்பெய்னில் நடைபெற இருக்கும் ஜியோமியின் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்