10ஜிபி ரேமுடன் "ஜியோமி பிளாக் ஷார்க்" கேமிங் போன் அறிமுகம்!

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 24 அக்டோபர் 2018 16:30 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோமி மீண்டும் பிளாக் ஷார்க் என்ற பெயரில் அடுத்த கட்ட கேமிங் போன்களை அறி
  • பிளாக் ஷார்க் ஹலோவின் ஆரம்ப விலை ரூ34,100 ஆகும்.
  • அக்.30 தேதியிலிருந்து விற்பனைக்கு வரும்.

ஜியோமி பிளாக் ஷார்க்கில் முக்கிய அம்சமாக திரவ குளிர்விக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதனால், சாதனம் அதிக வெப்பமடையாது.

ஜியோமி மீண்டும் பிளாக் ஷார்க் பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக் ஷார்க் ஹலோ என்ற அந்த ஸ்மார்ட்போன் நேற்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த பிளாக் ஷார்க்கின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த மாடல் வெளிவந்துள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனானது பல கேமிங் அம்சங்களுடன், சின்ன சின்ன அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. பிளாக் ஷார்க் ஹலோவில் 3 வித மாறுபாடுகளை கொண்ட ரேம் மற்றும் பெரிய டிஸ்பிளே உள்ளது. ஜியோமி நிறுவனம் தன்னுடைய தாய் நாடான சீனாவில் பிளாக் ஷார்க்கின் விற்பனையை தொடங்கி விட்ட நிலையில், உலகம் முழுவதும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
 

 

இதிலிருக்கும் திரவ குளிர்விப்பு தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைவதை தடுக்கிறது. இதில் இருக்கும் x+1 ஆண்டெனா இணைய இணைப்பு சிறந்த முறையில் இருக்கும் என்பதை உறுதி செய்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் முன்பகுதியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. பிளாக் ஷார்க்கின் முக்கிய அம்சங்கள், 10ஜிபி ரேம், 6.01 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 845 SoC,இமேஜ் ப்ராஸசிங் சிப் மற்றும் மேலும் பல உள்ளன. 

கேம் விளையாடுவதற்கு வசதியாக கண்ட்ரோலர் இருப்பதாக அந்நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது. இந்த கண்ட்ரோலரில், ஜாய்ஸ்டிக் உடன் மற்ற பட்டன்களும் இருக்கும். 6ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் போன்களில் இந்த பைபிளேன் கைபிடி இடது பக்கம் மட்டும் இருக்கும். 10 ஜிபி ரேம் மாடல்களில் இருபக்கமும் இருக்கும்.

ஜியோமி பிளாக் ஷார்க் ஹலோவின் விலை,

சீனாவில், பிளாக் ஷார்க் ஹலோவின் ஆரம்ப விலை ரூ.34,100 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜிற்கு மட்டுமே. 8ஜிபி+128ஜிபி-யின் விலை ரூ37,000 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 10ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.44,500 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும். 

ஜியோமி பிளாக் ஷார்க் ஹலோ-வின் விவரக் குறிப்புகள்

இரட்டை சிம் வசதி கொண்ட ஜியோமி பிளாக் ஷார்க் ஸ்போர்ட்ஸ் 18:9 என்ற விகிதத்தில் 6.01 இன்ச் டிஸ்பிளே. இந்த ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்நாப் டிராகன் 845 ப்ராஸசர் மற்றும் அட்ரீனோ 630 ஜிபியு மற்றும் 3 விதமான ரேம் ஸ்டோரேஜ் வசதியுடன் உள்ளது. 6ஜிபி, 8ஜிபி மற்றும் 10ஜிபி ரேம் மாடல்கள் உள்ளன. 

ஜியோமி பிளாக் ஷார்க்கில், இதன் முந்தைய பதிப்பில் இருக்கக்கூடிய கேமிராக்களை கொண்டுள்ளது. இதன் முன்பக்க கேமிரா 20 மெகா பிக்சலுடன் f2.2 கொண்டு உள்ளது. ஜியோமி பிளாக் ஷார்க் போன் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி குயிக் ஷார்க் 3.0 சப்போர்ட்டுடன் வருகிறது.

 
KEY SPECS
Display 6.01-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android
Resolution 1080x2160 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.