ஜியோமி மீண்டும் பிளாக் ஷார்க் பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக் ஷார்க் ஹலோ என்ற அந்த ஸ்மார்ட்போன் நேற்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த பிளாக் ஷார்க்கின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த மாடல் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது பல கேமிங் அம்சங்களுடன், சின்ன சின்ன அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. பிளாக் ஷார்க் ஹலோவில் 3 வித மாறுபாடுகளை கொண்ட ரேம் மற்றும் பெரிய டிஸ்பிளே உள்ளது. ஜியோமி நிறுவனம் தன்னுடைய தாய் நாடான சீனாவில் பிளாக் ஷார்க்கின் விற்பனையை தொடங்கி விட்ட நிலையில், உலகம் முழுவதும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதிலிருக்கும் திரவ குளிர்விப்பு தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைவதை தடுக்கிறது. இதில் இருக்கும் x+1 ஆண்டெனா இணைய இணைப்பு சிறந்த முறையில் இருக்கும் என்பதை உறுதி செய்வதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் முன்பகுதியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. பிளாக் ஷார்க்கின் முக்கிய அம்சங்கள், 10ஜிபி ரேம், 6.01 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 845 SoC,இமேஜ் ப்ராஸசிங் சிப் மற்றும் மேலும் பல உள்ளன.
கேம் விளையாடுவதற்கு வசதியாக கண்ட்ரோலர் இருப்பதாக அந்நிறுவனம் சார்பாக கூறப்பட்டுள்ளது. இந்த கண்ட்ரோலரில், ஜாய்ஸ்டிக் உடன் மற்ற பட்டன்களும் இருக்கும். 6ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் போன்களில் இந்த பைபிளேன் கைபிடி இடது பக்கம் மட்டும் இருக்கும். 10 ஜிபி ரேம் மாடல்களில் இருபக்கமும் இருக்கும்.
சீனாவில், பிளாக் ஷார்க் ஹலோவின் ஆரம்ப விலை ரூ.34,100 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜிற்கு மட்டுமே. 8ஜிபி+128ஜிபி-யின் விலை ரூ37,000 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 10ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.44,500 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.
இரட்டை சிம் வசதி கொண்ட ஜியோமி பிளாக் ஷார்க் ஸ்போர்ட்ஸ் 18:9 என்ற விகிதத்தில் 6.01 இன்ச் டிஸ்பிளே. இந்த ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்நாப் டிராகன் 845 ப்ராஸசர் மற்றும் அட்ரீனோ 630 ஜிபியு மற்றும் 3 விதமான ரேம் ஸ்டோரேஜ் வசதியுடன் உள்ளது. 6ஜிபி, 8ஜிபி மற்றும் 10ஜிபி ரேம் மாடல்கள் உள்ளன.
ஜியோமி பிளாக் ஷார்க்கில், இதன் முந்தைய பதிப்பில் இருக்கக்கூடிய கேமிராக்களை கொண்டுள்ளது. இதன் முன்பக்க கேமிரா 20 மெகா பிக்சலுடன் f2.2 கொண்டு உள்ளது. ஜியோமி பிளாக் ஷார்க் போன் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி குயிக் ஷார்க் 3.0 சப்போர்ட்டுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்