200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 டிசம்பர் 2025 15:56 IST
ஹைலைட்ஸ்
  • டிசம்பர் 25 அன்று சீனாவில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறது
  • Starry Sky Green எனும் புதிய நிறம் மற்றும் ஸ்லிம் டிசைன்.
  • 200MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 7,000mAh மெகா பேட்டரி வசதி.

Xiaomi 17 Ultraவின் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் கிண்டல் செய்யப்பட்டன.

இந்த 2025-ஆம் ஆண்டோட கடைசி அதிரடியை காட்ட சியோமி (Xiaomi) இப்போ தயார் ஆகிட்டாங்க. பல வாரங்களா லீக்கான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமா, சியோமி நிறுவனத்தின் சி.இ.ஓ லீ ஜுன் (Lei Jun), Xiaomi 17 Ultra மொபைலோட லான்ச் தேதியை அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. வர்ற டிசம்பர் 25-ஆம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் அன்னைக்கு மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30) இந்த போன் சீனாவில் அறிமுகமாகுது. இந்த லான்ச்ல எல்லாரையும் வாய் பிளக்க வச்சிருக்கிறது இதோட புதிய 'ஸ்டாரி ஸ்கை கிரீன்' (Starry Sky Green) கலர் தான். இது சாதாரண பச்சை கலர் இல்லீங்க, விண்மீன்கள் மின்னும் வானத்தைப் போல ஒரு ஸ்பெஷல் பினிஷிங்ல வருது. இதுல இருக்குற வால்யூம் பட்டன்கள் கூட ஒரு விண்டேஜ் கேமரா பாணியில வட்ட வடிவத்துல வடிவமைக்கப்பட்டிருக்கு.

கேமரா தான் இந்த போனோட உயிர்நாடி. லெய்கா (Leica) கூட சேர்ந்து சியோமி பண்ணியிருக்கிற இந்த மேஜிக்ல, பின்னாடி மூணு கேமராக்கள் இருக்கு. அதுல ஒரு 200MP Samsung பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கு, இதுல 'கண்டினியூயஸ் ஆப்டிகல் ஜூம்' வசதி உண்டு. அதாவது தூரத்துல இருக்குற பொருளை ஜூம் பண்ணும்போது குவாலிட்டி கொஞ்சம் கூட குறையாது. மெயின் கேமராவை பொறுத்தவரை 1-இன்ச் OmniVision OV50X சென்சார் பயன்படுத்தப்பட்டிருக்கு, இது நைட் போட்டோகிராபிக்கு செமயா இருக்கும்.

பெர்பார்மன்ஸ்னு பார்த்தா, இதுல Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இருக்கு. பேட்டரி விஷயத்துல சியோமி இந்த தடவை ஒரு பெரிய மைல்கல்லை எட்டியிருக்காங்க. 8.29mm மெலிதான போனுக்குள்ள 6,800mAh அல்லது 7,000mAh பேட்டரியை அடக்கியிருக்காங்க. இதுக்கு சிலிக்கான்-கார்பன் டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்காங்க. கூடவே 100W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு.

டிஸ்ப்ளேவுல இந்த முறை ஒரு பெரிய மாற்றம் இருக்கு. வளைந்த திரையை தவிர்த்துட்டு, 2D பிளாட் ஸ்க்ரீன் (Flat Display) முறையை சியோமி கையில் எடுத்திருக்காங்க. இது கேம் விளையாடுறவங்களுக்கும், போட்டோ எடுக்குறவங்களுக்கும் ரொம்ப வசதியா இருக்கும்.

இந்தியாவுல இந்த போன் 2026-ன் முதல் காலாண்டுல (மார்ச் மாத வாக்கில்) லான்ச் ஆகலாம். கேமராவுக்காகவே ஒரு போன் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸா இருக்கும்!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  2. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  3. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  4. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  5. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  6. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
  7. Super Actua ஃபிலெக்ஸ் டிஸ்ப்ளே, HiLight உடன் Google Pixel 11 Pro Fold இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  8. Tensor G6, டிரிபிள் கேமராவுடன் Google Pixel 11, 11 Pro, XL இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  9. அதிகரித்து வரும் மெமரி விலைகளுக்கு மத்தியில் இந்தியாவில் விவோ X300 FE விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது
  10. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.