சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடலான 'Xiaomi 17 Ultra' மொபைலை வரும் டிசம்பர் 25 அன்று அறிமுகப்படுத்துகிறது
Xiaomi 17 Ultraவின் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் கிண்டல் செய்யப்பட்டன.
இந்த 2025-ஆம் ஆண்டோட கடைசி அதிரடியை காட்ட சியோமி (Xiaomi) இப்போ தயார் ஆகிட்டாங்க. பல வாரங்களா லீக்கான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமா, சியோமி நிறுவனத்தின் சி.இ.ஓ லீ ஜுன் (Lei Jun), Xiaomi 17 Ultra மொபைலோட லான்ச் தேதியை அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. வர்ற டிசம்பர் 25-ஆம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் அன்னைக்கு மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30) இந்த போன் சீனாவில் அறிமுகமாகுது. இந்த லான்ச்ல எல்லாரையும் வாய் பிளக்க வச்சிருக்கிறது இதோட புதிய 'ஸ்டாரி ஸ்கை கிரீன்' (Starry Sky Green) கலர் தான். இது சாதாரண பச்சை கலர் இல்லீங்க, விண்மீன்கள் மின்னும் வானத்தைப் போல ஒரு ஸ்பெஷல் பினிஷிங்ல வருது. இதுல இருக்குற வால்யூம் பட்டன்கள் கூட ஒரு விண்டேஜ் கேமரா பாணியில வட்ட வடிவத்துல வடிவமைக்கப்பட்டிருக்கு.
கேமரா தான் இந்த போனோட உயிர்நாடி. லெய்கா (Leica) கூட சேர்ந்து சியோமி பண்ணியிருக்கிற இந்த மேஜிக்ல, பின்னாடி மூணு கேமராக்கள் இருக்கு. அதுல ஒரு 200MP Samsung பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கு, இதுல 'கண்டினியூயஸ் ஆப்டிகல் ஜூம்' வசதி உண்டு. அதாவது தூரத்துல இருக்குற பொருளை ஜூம் பண்ணும்போது குவாலிட்டி கொஞ்சம் கூட குறையாது. மெயின் கேமராவை பொறுத்தவரை 1-இன்ச் OmniVision OV50X சென்சார் பயன்படுத்தப்பட்டிருக்கு, இது நைட் போட்டோகிராபிக்கு செமயா இருக்கும்.
பெர்பார்மன்ஸ்னு பார்த்தா, இதுல Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இருக்கு. பேட்டரி விஷயத்துல சியோமி இந்த தடவை ஒரு பெரிய மைல்கல்லை எட்டியிருக்காங்க. 8.29mm மெலிதான போனுக்குள்ள 6,800mAh அல்லது 7,000mAh பேட்டரியை அடக்கியிருக்காங்க. இதுக்கு சிலிக்கான்-கார்பன் டெக்னாலஜியை பயன்படுத்தியிருக்காங்க. கூடவே 100W வயர்டு மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு.
டிஸ்ப்ளேவுல இந்த முறை ஒரு பெரிய மாற்றம் இருக்கு. வளைந்த திரையை தவிர்த்துட்டு, 2D பிளாட் ஸ்க்ரீன் (Flat Display) முறையை சியோமி கையில் எடுத்திருக்காங்க. இது கேம் விளையாடுறவங்களுக்கும், போட்டோ எடுக்குறவங்களுக்கும் ரொம்ப வசதியா இருக்கும்.
இந்தியாவுல இந்த போன் 2026-ன் முதல் காலாண்டுல (மார்ச் மாத வாக்கில்) லான்ச் ஆகலாம். கேமராவுக்காகவே ஒரு போன் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸா இருக்கும்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India