Xiaomi-ன் அடுத்த பிரம்மாண்டமான 'Ultra' மாடல் போன், சர்வதேச சந்தைகளில் லான்ச் ஆவதற்குத் தயாராகியுள்ளது
Photo Credit: Xiaomi
FCC சான்றில் Xiaomi 17Ultra குளோபல் லான்ச், 200MP, 7000mAh, Snapdragon8Gen5, 100W சார்ஜிங் விவரங்கள்
ஸ்மார்ட்போன் உலகத்துல கேமராவுக்கும், பெர்ஃபார்மன்ஸ்க்கும் எப்பவுமே ஒரு படி மேல நிக்கிறது Xiaomi-ன் Ultra மாடல் போன்கள் தான். இப்போ அந்த வரிசையில் வரப்போகிற Xiaomi 17 Ultra பத்தின ஒரு மாஸ் அப்டேட் கிடைச்சிருக்கு! இந்த போன் இப்போ அமெரிக்காவின் FCC மற்றும் IMEI சான்றிதழ் தளங்கள்ல பட்டியலிடப்பட்டிருக்கு. இதோட அர்த்தம் என்னன்னா, இந்த போன் கூடிய சீக்கிரம் உலகளவில் லான்ச் ஆகப் போகுது. இந்த Xiaomi 17 Ultra, சீனாவில் டிசம்பர் 26, 2025 அன்று அறிமுகமாகலாம்னு சொல்லப்படுது. இதோட குளோபல் வேரியண்ட் (Model Number: 2512BPNDAG) இப்போ கசிஞ்சிருக்கு.
1. கேமரா தான் கிங்! (Leica Quad Camera): வழக்கம் போல Xiaomi மற்றும் Leica கூட்டணியில் இந்த போனோட கேமரா மிரட்டலா இருக்கப் போகுது.
பின்னாடி நாலு கேமராக்கள் இருக்கும். அதுல ஒரு 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறுது! இது தூரத்துல இருக்குற காட்சிகளை கூட ரொம்பத் தெளிவா படம்பிடிக்க உதவும்.
மெயின் கேமராவுக்கு 1-இன்ச் OmniVision OV50X சென்சார் பயன்படுத்தப்படலாம். இதனால லோ-லைட் போட்டோகிராபி வேற லெவல்ல இருக்கும்!
2. 7,000mAh பிரம்மாண்ட பேட்டரி: இந்த முறை Xiaomi பேட்டரி சைஸை ரொம்பவே அதிகப்படுத்தியிருக்காங்க. இதுல 7,000mAh பேட்டரி வர வாய்ப்பிருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் பண்ண 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W அல்லது 80W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இருக்கு!
3. பெர்ஃபார்மன்ஸ் மான்ஸ்டர்: இதுல Qualcomm-இன் லேட்டஸ்ட் மற்றும் பவர்ஃபுல் Snapdragon 8 Gen 5 Elite சிப்செட் இருக்கும். கூடவே Android 16 அடிப்படையிலான HyperOS 3.0 மூலமா இந்த போன் இயங்கும். 16GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வரைக்கும் வேரியண்ட்கள் எதிர்பார்க்கப்படுது.
4. மற்ற சிறப்பம்சங்கள்:
டிஸ்பிளே: 6.8-இன்ச் 2K LTPO AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5,000 nits பீக் பிரைட்னஸ்.
சாட்டிலைட் கனெக்டிவிட்டி: சிக்னல் இல்லாத இடங்கள்ல கூட மெசேஜ் அல்லது கால் பண்ண Satellite Connectivity வசதி குளோபல் மாடல்ல இருக்கும்னு சொல்லப்படுது.
டிசைன்: 3D-பிரிண்டட் டைட்டானியம் அலாய் ஃபிரேம் (Titanium Alloy Frame) மூலம் போன் ரொம்ப உறுதியா இருக்கும்.
இந்த Xiaomi 17 Ultra இந்தியாவிற்கு ஜனவரி அல்லது பிப்ரவரி 2026-ல் வரும்னு எதிர்பார்க்கப்படுது. இதோட விலை சுமார் ₹1,09,999-ஐ ஒட்டி இருக்கலாம். கேமராவுக்காகவே ஒரு போன் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸா இருக்கும். இந்த 200MP கேமரா போனுக்காக நீங்க வெயிட் பண்றீங்களான்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon