யம்மாடி! 200 மெகா பிக்ஸல் கேமரா இருக்கா இதுல?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2024 11:42 IST
ஹைலைட்ஸ்
  • Xiaomi 14 Ultra ஆனது Snapdragon 8 Gen 3 So மூலம் இயக்கப்படுகிறது
  • Xiaomi 14 Ultra விலை இந்தியாவில் ரூ. 99,999 இருக்கலாம்
  • 4x ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது

Photo Credit: GSM China

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Xiaomi 15 Ultra பற்றி தான். 

Xiaomi 14 அல்ட்ரா பிப்ரவரியில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 என்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன பிராண்டான Xiaomi வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஃபோனைப் பற்றிய விவரங்களை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் அதன் விவரக்குறிப்புகள் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. Xiaomi 14 Ultra போலவே, வரவிருக்கும் Xiaomi 15 Ultra ஆனது பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. Qualcomm Snapdragon 8 Gen 4 சிப்செட் மூலம் இயக்கப்படும்.

Xiaomi 15 Ultra குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது 4.x ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. 200 மெகாபிக்சல் ஜூம் லென்ஸ் Xiaomi 14 Ultra செல்போனின் கேமரா அமைப்பை விட மேம்பட்டதாக இருக்கும் என தெரிய வருகிறது. இதற்கு முன் வந்த மாடல்களில் நான்கு 50 மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் இருந்தது. முதன்மை கேமரா 50-மெகாபிக்சல் சோனி LYT900 கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்டுள்ளது. அடுத்து 3.2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட இரண்டு 50 மெகாபிக்சல் சோனி IMX858 சென்சார் கேமராக்கள் உள்ளன. நான்காவது கேமரா அல்ட்ரா வைட் லென்ஸுடன் வருகிறது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Xiaomi 14 Ultra ஆனது Snapdragon 8 Gen 3 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் Xiaomi 15 Ultra செல்போனும் Snapdragon 8 Gen 4 சிப்செட் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

Xiaomi 14 அல்ட்ரா விலை

Xiaomi Ultra 15 இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.99,999 விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் வருகிறது. 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.  120Hz வரை ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதம் மற்றும் 3,000 nits உச்ச பிரகாசத்தை தரக்கூடியது. இது 90W வயர்டு, 80W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக அல்ட்ரா-சோனிக் கைரேகை சென்சார் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஹைப்பர்ஓஎஸ் 2.0 தனிப்பயன் ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையில் இயங்கும். Xiaomi Ultra 15 இன்னும் மேம்படுத்தப்பட்டால் 6,200mAh பேட்டரியுடன் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi 15 Ultra, Xiaomi 15 Ultra Specifications, Xiaomi 15
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  2. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  3. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  4. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  5. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  6. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  7. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  8. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  9. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  10. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.