யம்மாடி! 200 மெகா பிக்ஸல் கேமரா இருக்கா இதுல?

Xiaomi 15 Ultra இந்தியாவில் குவாட் ரியர் கேமராக்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யம்மாடி! 200 மெகா பிக்ஸல் கேமரா இருக்கா இதுல?

Photo Credit: GSM China

ஹைலைட்ஸ்
  • Xiaomi 14 Ultra ஆனது Snapdragon 8 Gen 3 So மூலம் இயக்கப்படுகிறது
  • Xiaomi 14 Ultra விலை இந்தியாவில் ரூ. 99,999 இருக்கலாம்
  • 4x ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Xiaomi 15 Ultra பற்றி தான். 

Xiaomi 14 அல்ட்ரா பிப்ரவரியில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 என்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன பிராண்டான Xiaomi வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஃபோனைப் பற்றிய விவரங்களை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் அதன் விவரக்குறிப்புகள் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. Xiaomi 14 Ultra போலவே, வரவிருக்கும் Xiaomi 15 Ultra ஆனது பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. Qualcomm Snapdragon 8 Gen 4 சிப்செட் மூலம் இயக்கப்படும்.

Xiaomi 15 Ultra குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது 4.x ஜூம் கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. 200 மெகாபிக்சல் ஜூம் லென்ஸ் Xiaomi 14 Ultra செல்போனின் கேமரா அமைப்பை விட மேம்பட்டதாக இருக்கும் என தெரிய வருகிறது. இதற்கு முன் வந்த மாடல்களில் நான்கு 50 மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் இருந்தது. முதன்மை கேமரா 50-மெகாபிக்சல் சோனி LYT900 கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்டுள்ளது. அடுத்து 3.2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட இரண்டு 50 மெகாபிக்சல் சோனி IMX858 சென்சார் கேமராக்கள் உள்ளன. நான்காவது கேமரா அல்ட்ரா வைட் லென்ஸுடன் வருகிறது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Xiaomi 14 Ultra ஆனது Snapdragon 8 Gen 3 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் Xiaomi 15 Ultra செல்போனும் Snapdragon 8 Gen 4 சிப்செட் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

Xiaomi 14 அல்ட்ரா விலை

Xiaomi Ultra 15 இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.99,999 விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் வருகிறது. 6.73-இன்ச் WQHD+ LTPO AMOLED வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.  120Hz வரை ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதம் மற்றும் 3,000 nits உச்ச பிரகாசத்தை தரக்கூடியது. இது 90W வயர்டு, 80W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக அல்ட்ரா-சோனிக் கைரேகை சென்சார் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஹைப்பர்ஓஎஸ் 2.0 தனிப்பயன் ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையில் இயங்கும். Xiaomi Ultra 15 இன்னும் மேம்படுத்தப்பட்டால் 6,200mAh பேட்டரியுடன் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »