வாட்ஸ்ஆப் நிறுவனம், தனது புதிய அப்டேட்டில் சுயவிவர படங்களை டவுன்லோட் செய்துகொள்ளும் பட்டனை நீக்கியுள்ளது.
வாட்ஸ்ஆப்பின் புதிய ஆண்ட்ராய்ட் பீடா வெர்ஷன் அப்டேட்
வாட்ஸ்ஆப்பில் சுயவிவர (Profile picture) படங்களை டவுன்லோட் செய்துகொள்ளம் பட்டனை அடுத்த அப்டேட்டில் நீக்கவுள்ளது, வாட்ஸ்ஆப் நிறுவனம். இந்த மாற்றம், வாட்ஸ்ஆப்பின் புதிய ஆண்ட்ராய்ட் அப்டேட்டில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்ட் அப்டேட்டில் மற்றுமின்றி ஐபோன் அப்டேட்டிலும், இந்த வசதியை நீக்கவுள்ளது. மேலும் ஐபோனில் முன்பு இருந்ததுபோல் இல்லாமல் நோட்டிபிகேசனிலேயே வாட்ஸ்ஆப்பில் வந்திருக்கும் ஸ்டிக்கர்களை பார்த்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு, அந்த நோட்டிபிகேசனை அழுத்திப் பிடித்தாலே போதும்.
இது குறித்த தகவலை வெளியிட்ட வாட்ஸ்ஆப் வல்லுநர் ஒருவர், வாட்ஸ்ஆப் நிறுவனம், தனது புதிய அப்டேட்டில் சுயவிவர படங்களை டவுன்லோட் செய்துகொள்ளும் பட்டனை நீக்கியுள்ளது. இந்த பட்டன் நீக்கப்பட்டது முதலில் ஐபோன்களில், வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் வெர்ஷனான 2.19.60.5 வெர்ஷனிலும், மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் பீடா வெர்சனான 2.19.143 வெர்ஷனிலும் காணப்பட்டுள்ளது.
தற்போழுது, ஒருவரின் சுயவிவர படத்தை திறந்தால், அங்கு அந்த புகைப்படத்தின் அருகில் சேர் செய்வதற்கென ஒரு பட்டன் இருக்கும். அந்த பட்டனை அழுத்தி, அந்த புகைப்படத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆனால், அடுத்து வெளிவரவுள்ள அப்டேட்டில், அந்த புகைப்படத்தை நீக்கவுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதனால், நேரடியாக உங்கள் வாட்ஸ்ஆப்பில் இருந்து புகைப்படத்தை டவுன்லோட் செய்துகொள்ள முடியாது.
வாட்ஸ்ஆப்பின் இந்த பீடா வெர்ஷனை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் நேரடியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
![]()
முன்னதாக, வாட்ஸ்ஆப் புதிதாக கொண்டுவரவுள்ள அப்டேட்டில் 155 எமோஜிக்களை புதிப்பித்து அறிமுகப்படுத்தவுள்ளது. அதுமட்டுமின்றி டார்க் மோடிற்கு பதிலாக நைட் மோட் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டில், குறிப்பிடத்தக்கதாக, வாட்ஸ்ஆப் நிறுவனம், பழைய அப்டேட்களில் இருந்த டார்க் மோட் நீக்கப்பட்டு நைட் மோடை அளிக்கவுள்ளது போன்ற தகவல்கள் வெளியாகின.
We discussed what WhatsApp absolutely needs to do in 2019, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show